Krithi Shetty: நான் CM- ஆனால் நிச்சயம் அந்த தண்டனையை கடுமையாக்குவேன் – கிரித்தி ஷெட்டி

Kriti Shetty Interview: கிரித்தி ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவருகிறார். இவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ள நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் நேர்காணல் ஒன்றில், தான் CM-ஆனால் முதல் முதலில் கையெழுத்திடும் சட்டம் பற்றி தெரிவித்துள்ளார்.

Krithi Shetty: நான் CM- ஆனால் நிச்சயம் அந்த தண்டனையை கடுமையாக்குவேன் - கிரித்தி ஷெட்டி

கிரித்தி ஷெட்டி

Updated On: 

04 Apr 2026 20:31 PM

 IST

தெலுங்கு சினிமாவின் மூலம் தனது 17வது வயதிலே கதாநாயகியாக நுழைந்தவர் கிரித்தி ஷெட்டி (Kirithi Shetty). இவர் பெடி (Peddi) பட இயக்குநர் புச்சி பாபு சனாவின் இயக்கத்தில் வெளியான “உப்பென” (Uppena) என்ற படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தார். தனது முதல் படத்திலே முத்த காட்சிகளில் நடித்திருந்த நிலையில், அதிகம் பேசப்பட்டிருந்தார். இதையடுத்து கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வகையில் இவருக்கு தமிழில் முதல் அறிமுக படமாக அமைந்தது வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து, அறிமுகமானார். இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிருக்கு தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கிரித்தி ஷெட்டி பேசுகையில், அவர் முதலமைச்சர் ஆனால், அவர் கையெழுத்திடும் முதல் சட்டம் என்ன என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சல்மான் கானுடன் ஜோடி.. சம்பளத்தில் புதிய உச்சம் தொட்ட நயன்தாரா!

CM-ஆனால் முதலில் கையெழுத்திடும் சட்டம் பற்றி கிரித்தி ஷெட்டி பேச்சு:

சமீபத்தில் நேர்காணலில் பேசிய கிரித்தி ஷெட்டியிடம், “தொகுப்பாளர் நீங்க முதலமைச்சர் ஆனால், கையெழுத்திடும் சட்டம் என்ன?என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த கிரித்தி ஷெட்டி, “நம் நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் போதுமான தண்டனைகள் இல்லை என்று நான் நினைக்கிறேன். எனவே, அதற்காக, நான் கடுமையான தண்டனை சட்டத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். படங்களில் நிறைய இதுபற்றி சொல்லிருக்காங்க, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சரியில்லை. அதற்காக முதல் சட்டத்தில் கையெழுத்திடுவேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து கிரித்தி ஷெட்டி வெளியிட்ட பதிவு:

நடிகை கிரித்தி ஷெட்டி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை அடுத்ததாக தமிழில், ஜீனி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ரவி மோகனுடன் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் இரண்டாவது நடிகையாக கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இந்த 2026ம் ஆனது இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்
கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்
ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
OTT Movie: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?
Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்