Krithi Shetty: நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை.. அந்த படத்தை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன் – கீர்த்தி ஷெட்டி!

Krithi Shetty About Karthi: கன்னட மொழி சினிமாவில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர்தான் கீர்த்தி ஷெட்டி. சமீபத்தில் பத்திரிகை நேர்காணலில் பேசிய அவர், நடிகர் கார்த்தி குறித்து மனம்திறந்துள்ளார். அவர் அதில் என்ன கூறியிருந்தார் என்பது குறித்து பார்க்கலாம்.

Krithi Shetty: நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை.. அந்த படத்தை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன் - கீர்த்தி ஷெட்டி!

கார்த்தி - கீர்த்தி ஷெட்டி

Published: 

25 Nov 2025 20:17 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகையாக கலக்கிவருபவர் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty). இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 3 திரைப்படங்கள் உருவாகி வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. அவர் பிரதீப் ரங்கநாதனுடன் (Pradeep Ranganathan) லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் (LIK), கார்த்தியுடன் (Karthi) வா வாத்தியார் (Vaa Vaathiyaar) மற்றும் ரவி மோகனுடன் (Ravi Mohan) ஜீனி (Genie) போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் சிறப்பு நடனத்தில் ஜீனி படத்திலிருந்து அப்தி அப்தி என்ற பாடலானது வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்திருந்தது. மேலும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் வா வாத்தியார்.

இதில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி, நடிகர் கார்த்தி குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் AK64 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் ஓவர்.. ஷூட்டிங்கில் இனி தாமதமில்லை- ஆதிக் ரவிச்சந்திரன்!

லவ் இன்சூரன்ஸ் படம் ஷூட்டிங் குறித்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் கார்த்தி குறித்து கீர்த்தி ஷெட்டி வெளிப்படையாக சொன்ன விஷயம் :

அந்த பத்திரிகை நேர்காணலில் நடிகை கீர்த்தி ஷெட்டி, “நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை. நான் அவருடைய பையா திரைப்படத்தை கிட்டத்தட்ட 100 முறிக்கும் மேல் பார்த்திருக்கிறேன். அந்த படத்தை ஒவ்வொரு முறையும் நன் பார்க்கும்போது ரசித்திருக்கிறேன். மேலும் தி வாரியார் திரைப்படத்தின் ஷூட்டிங் ஒருமுறை ஹைதராபாத்தில் நடந்தது. அந்த ஷூட்டிங்கின்போதுதான் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் அருகில் நடப்பதாக நான் தெரிந்துகொண்டேன். மேலும் இது குறித்து இயக்குனர் நலன் குமாரசாமியும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஹீரோ லா உங்களுக்கு செட் ஆகாதுன்னு சொன்னாரு.. தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன்!

நாங்கள் இருவரும் கார்த்தி சாரை நேரில் சந்திப்பதாக இருந்தது, ஆனால் எனக்கு ஷூட்டிங் கொஞ்சம் கடுமையாக போனதால் அப்போது அவரை என்னால் சந்திக்கமுடியவில்லை. மேலும் ஒருநாள் நடிகை நதியா மேம் கார்த்தி சாரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார், அப்போது அவரிடம் என்னையும் அவர் பேசவைத்தார். அவரிடம் போனில் பேசும்போதுதான் அவரின் பையா திரைப்படத்தை நான் 100 தடவைக்கும் மேல் பார்த்ததாக அவரிடம் கூறியிருந்தேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..