Gauri G Kishan: யூடியூப்பரை எதிர்த்து கௌரி ஜி கிஷனின் தைரியமான பதில்.. ஆதரவு தெரிவித்த குஷ்பு – சின்மயி!

Gouri G. Kishan Fights Body Shaming; தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் கௌரி ஜி கிஷன். இவர் சமீபத்தில் அதர்ஸ் என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, யூடியூபர் இவரின் எடை குறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு இவர் தக்க பதிலடி கொடுத்திருந்த நிலையில், அதற்கு குஷ்பு , பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளனர்.

Gauri G Kishan: யூடியூப்பரை எதிர்த்து கௌரி ஜி கிஷனின் தைரியமான பதில்.. ஆதரவு தெரிவித்த குஷ்பு - சின்மயி!

சின்மயி, கௌரி கிஷன் மற்றும் குஷ்பு

Published: 

07 Nov 2025 16:27 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மிகவும் பிரபலமான திரைப்படம்தான் 96. இதில் சிறுவயது திரிஷா (Trisha) கதாபாத்திரத்தில் நடித்திருந்த இளம் நடிகைதான் கௌரி ஜி. கிஷன் (Gouri G. Kishan). இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் இதற்கு முன் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு சூப்பர் ஹிட் வரவேற்பை கொடுத்தது 96 படம்தான். இந்நிலையில் இந்த படத்தை அடுத்ததாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இன்று 2025 நவம்பர் 7ம் தேதியில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் அதர்ஸ் (Others). இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சமீபத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நவம்பர் 6, 2025 அன்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றிருந்தது.

அதில் யூடியூபர் ஒருவர் நடிகை கௌரி ஜி கிஷனின் எடை (Weight) குறித்து கேள்வியை எழுப்பினார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை கௌரி ஜி கிஷனும் பதிலளித்திருந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்த மக்கள் மற்றும் பிரபலங்களும் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் நடிகை கௌரி ஜி கிஷனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் நடிகை குஷ்பு (Khushboo) மற்றும் பாடகி சின்மயி (Chinmayi) எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ‘மாஸ்க்’ படத்தில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்!

கௌரி ஜி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் நடிகை குஷ்பு, “பத்திக்கைத்துறை தனது தரத்தை இழந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் பத்திரிக்கைக்கு சாக்கடையை எடுத்துச்செல்கிறார்கள். பெண் நடிகையிடம் அவரின் எடை என்ன என்று கேட்பது அவரின் வேலை இல்லை, இதை நடிகரிடம் கேட்கலாமே?, இந்த கேள்விக்கு பதிலடி கொடுத்த கௌரி ஜி கிஷனுக்கு எனது பாராட்டுக்கள்” என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

கௌரி ஜி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து பாட்டுக்கு சின்மயி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் பாடகி சின்மயி, “கௌரி அற்புதமான வேலையை செய்திருக்கிறார். அவமரியாதை மற்றும் தேவையற்ற கேள்விகளை கேட்டும் தருணத்தில் நிச்சயம் கூச்சல்கள் எழும். இளம் வயதுடைய நடிகை ஒருவர் தனது நிலைப்பாட்டில் நின்று பின்வாங்காமல் இருந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.

இதையும் படிங்க : ‘சர்ச்சை கேள்வி’.. தனியாளாக சண்டை செய்து யூடியூபரை வெளுத்து வாங்கிய நடிகை கெளரி கிஷன்!!

எந்த ஒரு ஆண் நடிகரிடமும் எடை குறிதான் கேள்விகள் ஏன் கேட்கப்படவில்லை? , நடிகைகளிடம் ஏன் கேட்கிறார்கள் என தெரியவில்லை” என்று அதில் கௌரி ஜி கிஷனுக்கு ஆதரவாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.