Youth Movie: முட்ட கலக்கி.. கென் கருணாஸின் ‘யூத்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!
Youth Movie First Song: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, தனுஷின் படங்களில் தொடர்ந்து நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். இவர் தற்போது இயக்குநராகவும், நாயகனாகவும் படத்தை இயக்கி நடிக்கும் படம் யூத். ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

யூத் திரைப்பட முதல் பாடல்
கோலிவுட் சினிமாவில் மக்களிடையே பிரபலமான இளம் நடிகராக இருந்து வருபவர் கென் கருணாஸ் (Ken Karunas). இவர் பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான கருணாஸின் (Karunas) மகன் ஆவர். இவர் தமிழில் அழகு குட்டி செல்லம் மற்றும் ரகளபுரம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான வாத்தி (Vaathi) மற்றும் அசுரன் (Asuran) போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரவேற்கப்பட்டிருந்தார். இப்படத்தை அடுத்தாக வெற்றிமாறனின் இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை பார்ட் 2 படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக கதாநாயகனாகவும் இயக்குநராகவும் இவர் அறிமுகமாகியுள்ள படம்தான் யூத் (Youth). இப்படத்தை பர்வதா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (G.V.Prakash Kumar) இசையமைத்துவருகிறார்.
இவரின் இசையமைப்பில் இப்படம் தயாராகிவரும் நிலையில், தற்போது இதன் முதல் பாடலான “முட்ட கலக்கி” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை கென் கருணாஸ் எழுதியுள்ள நிலையில், இப்பாடலையும் அவரே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ500ல் இருந்த மகிழ்ச்சி.. கோடியில் சம்பளம் வாங்கும்போது இல்லை – அனிருத் பேச்சு!
யூத் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
here is the first single from #Youth #MuttaKalakki in my own audio label @gvpkwav
Need ur support and love for this new venture ❤️❤️
With luv , GV https://t.co/DvHEzvmt94— G.V.Prakash Kumar (@gvprakash) February 7, 2026
கென் கருணாஸின் யூத் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த யூத் படத்தில் கென் கருணாஸ் நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருடன் இப்படத்தை அவரின் நண்பர்களும் இணைந்து இயக்கியுள்ளார். இப்படத்தில் கென் கருணாஸுக்கு ஜோடியாக, சிறை படத்தில் நடித்திருந்த மலையாள நடிகை அனிஷிமா அனில்குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கென் கருணாஸின் அப்பா மற்றும் அம்மா வேடத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிரியதர்ஷினி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பள்ளிப்பருவ காதல், எமோஷனல் மற்றும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்கை குறித்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி படம்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026 மார்ச் மாதத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.