நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியானது உப்பு கப்புறம்பு படத்தின் டிரெய்லர்

Uppu Kappurambu - Official Trailer | நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ள படம் உப்பு கப்புறம்பு. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியானது உப்பு கப்புறம்பு படத்தின் டிரெய்லர்

உப்பு கப்புறம்பு

Published: 

19 Jun 2025 18:33 PM

 IST

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ளப் படம் உப்பு கப்புறம்பு. தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்தப் உப்பு கம்புறம்பு படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இயக்குநர் அனி ஐ.வி.சசி (Director Ani I.V.Sasi) இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள படம் உப்பு கப்புறம்பு. காமெடி ட்ராமாவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர்கள் சுஹாஸ் பகோலு, பாபு மோகன், சத்ரு, டல்லூரி ராமேஸ்வரி, சுபலேகா சுதாகர், ரவி தேஜா, விஷ்ணு ஓ.ஐ, துவ்வாசி மோகன், சிவன்நாராயணா, பிரபாவதி வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த உப்பு கப்புறம்பு படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான எல்லானார் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராதிகா லாவு தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் உப்பு கப்புறம்பு பட டிரெய்லர்:

தென்னிந்தியவில் உள்ள ஒரு கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அடுத்தடுத்து உயிரிழப்பவர்களை புதைப்பதற்கு சுடுகாட்டில் இடப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதற்கு கிராமத் தலைவரான கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நாயகன் சுஹாஸ் பகோலு என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை.

கிராமத்து தலைவராக இருந்த போதிலும் தெளிவான முடிவு எடுக்கத்தெரியாத பெண்ணாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மிகவும் சீரியசான டாபிக்கை காமெடியை மையமாக வைத்து இயக்குநர் எடுத்துள்ளார் என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிகின்றது. மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே கண்டிப்பாக வரவேற்பைப் பெறும் என்றும் ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் உப்பு கப்புறம்பு பட ட்ரெய்லர்:

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..