Thug Life : வசூலில் தக் லைஃப்.. ஒருவாரம் முடிவில் இதுவரை வெறும் இத்தனை கோடிகள்தானா?

Thug Life Movie Total Collection : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் முன்னணி நடிகர்களாகக் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியான நிலையில், ஒருவாரம் முடிவில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

Thug Life : வசூலில் தக் லைஃப்.. ஒருவாரம் முடிவில் இதுவரை வெறும் இத்தனை கோடிகள்தானா?

கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன்

Updated On: 

12 Jun 2025 21:52 PM

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாக்கியிருக்கிறது. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தைதான் கதையை நடிகர் கமல்ஹாசன் எழுத, இணைந்து இயக்குநர் மணிரத்னமும் (Mani Ratnam) பணியாற்றியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு இணையான 2வது நாயகன் ரோலில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்திருந்தார். இந்த படம்தான் காயல்பட்டினத்தை சேர்ந்த கேங்ஸ்டர் ஒருவர் புது தில்லியில் செய்யும் வேலைகள் பற்றியும், கேங்ஸ்டர் கேங்கிற்குள் நடக்கும் போட்டிகள் பற்றியும் இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இந்த படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது வெளியாகி 7 நாட்கள், அதாவது 1 வாரம் நிறைவடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?, இப்படமானது இதுவரை சுமார் ரூ. 42.25 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாக NDTV செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் மற்றும் கமல்ஹாசனின் நடிப்பு :

தக் லைஃப் திரைப்படமானது நடிகர் கமல்ஹாசனின் முன்னணி நடிப்பில்தான் உருவாகியிருக்கிறது. இந்தப் படமானது கமல்234 என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்துதான் நடிகர் சிலம்பரசன் இப்படத்தில் இணைந்தார். மேலும் முதலில் சிலம்பரசன் நடித்திருக்கும் இந்த அமரன் ரோலில் நடிகர் துல்கர் சல்மான்தான் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 தோல்விக்குப் பின் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த படம்தான் தக் லைஃப்.

ஆனால் இந்த தக் லைஃப் படத்தில் ரசிகர்களுக்கு ஏற்ற சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் பல எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இந்த படத்தில் முன்னணி கதாநாயகியான நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். ஆனால் அவரின் கதாபாத்திரமான இந்திராணி ரோல் இந்த படத்தில் தேவை இல்லாத ஒரு கதாபாத்திரமாக இருப்பது போலத்தான் இருந்தது. மேலும் இப்படத்தில் சிலம்பரசன் மற்றும் கமல்ஹாசனுக்கு இடையேயான காட்சிகளும் ஓரளவிற்கு நன்றாக இருந்தது என்றே கூறலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் :

இந்த படத்தின் ரிலீசிற்கு முன் நடந்த இசை வெளியீட்டு விழாவில், பாடகி சின்மயி பாடிய முத்தமழை என்றார் பாடலானது மிகவும் வைரலானது. திரிஷாவின் அந்த பாடலை பார்ப்பதற்காகவே பலரும் ஆர்வமாக இருந்தனர், ஆனால் அந்த முத்தமழை என்ற பாடலே தக் லைஃப் படத்தில் இடம் பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது என்றே கூறலாம்.