Kalyani Priyadarshan: ஜீனி ஷூட்டிங்கில் நடந்த காமெடி.. கல்யாணி பிரியதர்ஷன் பகிரும் தகவல்!
Kalyani Priyadarshan About Genie Movie : தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவரின் நடிப்பில் லோகா என்ற படமானது வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் இவர், தமிழில் ரவி மோகனுடன் ஜீனி படத்தின் பணியாற்றியது குறித்து பேசியுள்ளார்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தார். அதை தொடர்ந்து, தற்போது ஜீனி (Genie) மற்றும் மார்ஷல் (Marshal) போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதில் நடிகர் ரவி மோகனுடன் (Ravi Mohan) ஜீனி படத்தில் முன்னணி கதநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவருடன் நடிகை கீர்த்தி ஷெட்டியும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதைக்களத்துடன் உருவாகியுள்ள படம் லோகா (Lokah).
இப்படத்தில் அவருடன் நடிகர் நஸ்லேன் இணைந்த நடித்துள்ளார். இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர் மார்ஷல் மற்றும் ஜீனி போன்ற படங்களை பற்றியும் பேசியிருந்தார். இந்நிலையில், ஜீனி படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த நகைச்சுவையான விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : புரட்சி தளபதி விஷாலின் 35வது திரைப்படம்.. அதிரடியாக வெளியான டைட்டில் டீசர்!
ஜீனி பட ஷூட்டிங்கில் நடந்த காமெடி சம்பவம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு :
அந்த நேர்காணலில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் அவரும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அந்த வகையில், அவர் நடிகர் ரவி மோகனுடன் ஜீனி படத்தில் பணியாற்றியது பற்றியும் பேசியிருக்கிறார். அதில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், ” ஜீனி படத்தில் நான் மிகவும் நம்பிக்கையாக பணியாற்றினேன். ஏனென்றால் எனக்கு தமிழ் நன்றாக தெரியும். நான் நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று, ஸ்கிரிப்டை வாங்கி படிப்பேன். ஆனால் கீர்த்தி ஷெட்டி, எல்லா ஸ்கிரிப்டையும் கத்துக்கிட்டு ஷூட்டிங் வருவார்.
இதையும் படிங்க : என்னால சினிமாவில் அப்படிதான் இருக்க முடியும் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சொன்ன விசயம்
அதை போல ஜீனி படத்தின் டப்பிங்கிற்கு சென்றபோது,என்னபேசவேண்டும் என கேட்டேன், அதற்கு இயக்குநர் நானும், ரவி மோகன் சாரும் என்னவேண்டுமானாலும் பேசலானு காமெடியாக சொன்னாரு” என்று அந்த நேர்காணலில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், ஜீனி படத்தின் பொது நடந்த நகைச்சுவையான விஷயங்ககள் பற்றி பகிர்ந்திருந்தார்.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஜீனி பட இன்ஸ்டாகிராம் பதிவு :
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், ஜீனி படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தியுடன் படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது மார்ஷல் என அழைக்கப்படும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருக்கிறது. இந்த படமானது இவரின் நடிப்பில் தமிழில் நான்காவது படமாகும். இப்படத்தை இயக்குநர் தமிழ் இயக்கி வருகிறார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.