என்னால சினிமாவில் அப்படிதான் இருக்க முடியும் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சொன்ன விசயம்

Actress Kalyani Priyadarshan: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் இவரது நடிப்பில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது.

என்னால சினிமாவில் அப்படிதான் இருக்க முடியும் - நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சொன்ன விசயம்

நடிகை கல்யாணி பிரியதர்ஷன்

Updated On: 

24 Aug 2025 15:02 PM

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான ஹெலோ என்ற படத்தின் மூலம் நாயகியாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் அகில் அக்கினேனி நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் வெளியான ஹீரோ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனர். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான வாரனே ஆவஷ்யமுண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். ஒரு மலையாளியான இவர் முதலில் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அறிமுகம் ஆன பிறகே மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இரண்டு படங்களும் மலையாள சினிமாவில் இரண்டு படங்களும் அவர் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் தான் என்னால் நடிக்க முடியும்:

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் தற்போது மலையாள சினிமாவில் லோகா மற்றும் ஓடும் குதிரை சாடும் குதிரை படமும் தமிழில் ஜீனி மற்றும் மார்ஷல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது, நான் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அந்தப் படத்தில் நடித்து முடுத்தப்பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பேன். ஒரே நேரத்தில் பல்வேறு படங்களில் நடிக்க என்னால் முடியாது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை… நடிகை சுவாசிகா ஓபன் டாக்

ரசிகர்களிடையே வைரலாகும் கல்யாணி பிரியதர்ஷனின் பேச்சு:

Also Read… தலைவன் தலைவி முதல் மாரீசன் வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன புது வரவு?