ஆடியோ லாஞ்ச் தொடர்ந்து வெளியாகும் ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்… இணையத்தில் கசிந்த தகவல்

Jana Nayagan Movie Trailer Update: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆடியோ லாஞ்ச் தொடர்ந்து வெளியாகும் ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்... இணையத்தில் கசிந்த தகவல்

ஜன நாயகன்

Published: 

25 Nov 2025 18:16 PM

 IST

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படம் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகும் 69-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தான் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள இறுதிப் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலையாவின் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரியின் ரீமேக் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியான பிறகே தெரியவரும். மேலும் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இரண்டாவது முறையக நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது தற்போது படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

அதன்படி நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஜன நாயகன் படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக மலேசியாவில் வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடைபெறுகின்றது. இந்த விழாவில் நடிகர் விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியான பல ஹிட் பாடல்களை முன்னணி பாடகர்கள் அனைவரும் கலந்துகொண்டு பாட உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நியூ இயரை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read… அரசன் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்த விஜய் சேதுபதி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also read… வெளியீட்டிற்கு 50 நாட்களே உள்ள பராசக்தி படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்