சினிமாவில் 49 ஆண்டுகளை கடந்த ராதிகா சரத்குமார்.. கேக் வெட்டி கொண்டாடிய ஹாய் படக்குழு!
Radhika Sarathkumars 49th Year In Cinema: நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் பிரபலமான 80ஸ் நடிகை. இவர் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் கடந்த நிலையில், அதை கொண்டாடும் விதத்தில் நயன்தாரா மற்றும் கவினின் ஹாய் படக்குழு செலிபிரெட் செய்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

ராதிகாவிற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஹாய் படக்குழு
தமிழ் சினிமாவில் பிரபலமிக்க 80ஸ் நடிகையாக இருந்துவருபவர் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. மேலும் இவர் தற்போது தெலுங்கு மொழியிலும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் நடிகர் விஜய் (Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு பிரபலங்களுக்கு அம்மா வேடத்திலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் “தாய் கிழவி” (Thaai Kizhavi). கடந்த 2026 பிப்ரவரி 27ம் தேதியில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இதையடுத்து சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) படத்தில் நடித்துள்ளார். நடிகை ராதிகா சரத்குமார், பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகள். இவர் கடந்த 1978ம் ஆண்டில் வெளியான “கிழக்கே போகும் ரயில்” (Kizhakke Pogum Rail) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் முதல் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், ஹாய் படக்குழு (Hi Movie Crew) இதை கொண்டாடியுள்ளது. நடிகை ராதிகா சரத்குமாருக்கு கேக் வெட்டி, நடிகர்கள் கவின் (Kavin), நயன்தாரா (Nayanthara) போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் தலைவர் 173 படத்தின் பணிகள்… சமீபத்திய அப்டேட் என்ன தெரியுமா?
ராதிகா சரத்குமாருக்கு கேக் வெட்டி கொண்டாடிய ஹாய் படக்குழு குறித்த எக்ஸ் பதிவு:
A remarkable 49-year journey in cinema! 🌟 The unit of Hi celebrated this milestone of @realradikaa ma’am on the film’s set with a cake cutting ceremony ! 🎉#Nayanthara @Kavin_m_0431 @VishnuEdavan1 @JenMartinmusic @zeestudiossouth @Rowdy_Pictures @7screenstudio @proyuvraaj pic.twitter.com/s5ozOyuFcm
— EDISON AWARDS (@edison_awards) March 23, 2026
நடிகை ராதிகா சரத்குமார் தொடர்ந்து புது புது படங்களில் இணைந்து நடித்துவருகிறார். இவர் பல்வேறு நடிகர்களுக்கு தாயாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமாக ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியானது தாய் கிழவி படம். இது கிட்டத்தட்ட ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் , கவினுடன் ஹாய் போன்ற படத்தில் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர்
இதில் கவின் நடித்துவரும் ஹாய் படத்தை இயக்குநர் விஷ்ணு இடவன் இயக்கிவருகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இணைந்து நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படக்குழு ராதிகா சரத்குமாரின் 49வது ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடியுள்ளது. இந்த் கொண்டாட்டத்தில் கவின், நயன்தாரா, பாக்யராஜ், அறிவு, இயக்குனர் விஷ்ணு இடவன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து கலந்துகொண்டுள்ளனர்.