Diesel Movie: ஆக்சன் நாயகனாக மாறிய ஹரிஷ் கல்யாண்.. வெளியானது ‘டீசல்’ பட டிரெய்லர்!

Diesel Movie Trailer: ஹரிஷ் கல்யாணின் முன்னணி நடிப்பில் 2025 தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் படம் தான் டீசல். அதிரடி கதைக்களத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Diesel Movie: ஆக்சன் நாயகனாக மாறிய ஹரிஷ் கல்யாண்.. வெளியானது டீசல் பட டிரெய்லர்!

டீசல் பட ட்ரெய்லர்

Published: 

10 Oct 2025 17:15 PM

 IST

நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish Kalyan) நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் பார்க்கிங் (Parking). இந்த படமானது, 2025ம் ஆண்டில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கிட்டத்தட்ட 3 விருதுகளை வென்று ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வகையில், இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, படங்ககளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வாறு இயக்குநர் சண்முகம் முத்துசாமியின் (Shanmugam Muthusamy) இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் படம் தான் டீசல் (Diesel). இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், 3 வருட உழைப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் வட சென்னையில் வாழும் இளைஞராக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) நடித்திருக்கிறார். இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1 – முதல் வாரத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

 டீசல் திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் :

ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

நடிகர் ஹரிஸ் கல்யாணின் இந்த டீசல் படத்தின் ட்ரெய்லருக்கு நடிகர் மணிகண்டன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் கதையானது, வட சென்னை பகுதியில் நடைபெறும் ஒரு கேங்ஸ்டர்ஸ் வார் கதைக்களத்துடன் தயாராகியுள்ளதாம். இந்த படமானது கச்சா என்னை கடத்தல் தொடர்பான உண்மையான கதையில் உருவாகியுள்ளது.

இதில் தனியார் நிறுவனத்தின் அட்டூழியங்களை ஒழிக்கும் ஹீரோ போன்ற கதையில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விரைவில் திரிஷாவுக்கு திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

இதில் நடிகை அதுல்யா ரவியும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் வினய் ராய், பி. சாய் குமார், அனன்யா, கருணாஸ், காளி வெங்கட், சாகிர் ஹுஸைன், தங்கதுரை, மற்றும் விவேக் பிரசன்னா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தத்க்கது.

ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு :

ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இந்த படமானது சிறிய பட்ஜெட்டில் வெளியாகியிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில், இந்த டீசல் திரைப்படமும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என ரசிகர்கள் நம்பிவருகின்றனர்.