நீக் பட நடிகர் பவிஷின் புதிய படத்திற்கான டைட்டில் வெளியானது..!

Pavish Narayan New Movie: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் தனுஷ். இவரின் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் பவிஷ் நாராயண். இப்படத்தை அடுத்தாக இவர் நடித்துவரும் புதிய படத்தின் டைட்டிலை ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

நீக் பட நடிகர் பவிஷின் புதிய படத்திற்கான டைட்டில் வெளியானது..!

நடிகர் பவிஷின் புதிய படம்

Published: 

12 Nov 2025 19:21 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெளியான திரைப்படம்தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam). இந்த படத்தில் நடிகர்கள் பவிஷ் நாராயண் (Pavish Narayan), அனிகா சுரேந்தர், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்திவ் தாமஸ் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர்தான் பவிஷ் நாராயண். இவர் நடிகர் தனுஷின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த நீக் படத்திற்கு முன் வாத்தி (Vaathi), கேப்டன் மில்லர், திருச்சிற்றம்பலம் மற்றும் ராயன் போன்ற படங்களில் சில காட்சிகளில் இடம்பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து இவர் சினிமாவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு பிறகு, புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் ஆரம்பத்தில் பவிஷ் நெக்ஸ்ட் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டிலை ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு “லவ் ஓ லவ்” (Love oh Love) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 13 வருடத்திற்கு பின் தமிழில் ரீ எண்டரி.. ஜெயிலர் 2 படத்தில் இணையும் பிரபல நடிகை?

ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட பவிஷ் நாராயணின் புதிய பட டைட்டில் பதிவு :

இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தை ஷினிமா மற்றும் கிரியேடிவ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிகர் பவிஷ் நாராயணுக்கு ஜோடியாக அறிமுக நடிகை நாக துர்கா நடிக்கவுள்ளார். இவர் பிரபல தெலுங்கு யூடியூப் பிரபலம் ஆவார். இவருக்கு இதுதான் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 14 வருடங்களுக்குப் பிறகு நான் செய்த விஷயம்.. என் அப்பா முதலில் பதற்றமானார் – துல்கர் சல்மான்!

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஃபாக்ஸ்ன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜைகளுடன் தொடங்கியிருந்த நிலையில், தற்போது சென்னையின் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெற்றுவருகிறதாம். இந்த படமானது ரொமாண்டிக் காதல் படமாக உருவாகாவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.