தேரே இஸ்க் மெய்ன் முதல் ரிவால்வர் ரீட்டா வரை… இந்த வாரம் தியேட்டரில் எந்த படத்தை பார்க்க போறீங்க?
This Week Theatre Release Movies: ஒவ்வொரு வாரமும் இந்திய சினிமாவில் பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் குறித்து தற்போது பார்க்கலாம்.

படங்கள்
தேரே இஸ்க் மெய்ன்: இயக்குநர் ஆனத் எல் ராய் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக நடிகர் தனுஷை இந்தி சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்த இயக்குநர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி உள்ள இந்தப் படம் நாளை 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தேரே இஸ்க் மெய்ன் படத்தின் ட்ரெய்லர் இதோ:
ஃப்ரைடே: இயக்குநர் ஹரி வெங்கடேஷ் எழுதி இயக்கி உள்ள படம் ஃப்ரைடே. இந்தப் படத்தில் மைம் கோபி, கேபிஒய் தீனா, ராமச்சந்திர துரைராஜ், அனிஷ் மாசிலாமணி, கலையரசன், சித்து குமரேசன், சித்ராசேனன் என பலர் நடித்துள்ளனர். டக்டம் மோஷன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் அனிஷ் மாசிலாமணி தயாரித்து உள்ளார். இந்தப் படம் நாளை 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஃப்ரைடே படத்தின் ட்ரெய்லர் இதோ:
வெள்ளகுதிரை: இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி இயக்கி உள்ள படம் வெள்ளகுதிரை. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ், ரெஜின் ரோஸ், மெலடி, உத்திரி விஜயகுமார் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தினை தயாரிப்பு நிறுவனமான நிஞ்சா சினிமா சார்பாக தயாரிப்பாளர் ஹரிஷ் ஓரி அர்த்தனாரி தயாரித்துள்ளார். இந்தப் படம் நாளை 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெள்ளகுதிரை படத்தின் ட்ரெய்லர் இதோ:
ரிவால்வர் ரீட்டா: இயக்குநர் கே சந்துரு எழுதி இயக்கி உள்ள படம் ரிவால்வர் ரீட்டா. இந்தப் படம் நாயகியை மையமாக வைத்து டார்க் காமெடி பாணியில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார், சுனில், அஜய் கோஷ், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாண் மாஸ்டர், ஜான் விஜய், சுரேஷ் சக்ரவர்த்தி, சென்ட்ராயன், கதிரவன், அகஸ்டின், ராமச்சந்திரன், பிளேட் சங்கர், அக்ஷதா குஹாசினி, அஜித், காயத்ரி ஷான் என பலர் நடித்துள்ளனர். படம் நாளை 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.