Maareesan : வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ – முதல் பாடல் வெளியீடு!
Maareesan Movie FAFA Song : நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் மாரீசன். இந்த படத்தைப் பிரபல மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கும் நிலையில், படக்குழு படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

மாரீசன் படத்தின் ஃபஃபா பாடல்
பிரபல மலையாள இயக்குநர்களில் ஒருவர்தான் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar). இவரின் முன்னணி இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு (Vadivelu) மற்றும் ஃபகத் பாசில் (Fahadh Faasil) இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்தான் மாரீசன் (Maareesan). இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இணைந்து வித்தியாசமாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஆர். பி சௌத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Flims) மூலமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படமானது காமெடி கலந்த எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ரிலீஸ் நெருங்கும் நிலையில், படக்குழு முதல் பாடலை வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த மாரீசன் படத்திலிருந்து FAFA என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
மாரீசன் படக்குழு வெளியிட்ட முதல் பாடல் பதிவு :
Hit Play, Feel The Vibe, and Let The Madness Begin 🎧#FAFAtrack Featuring #FahadhFaasil Featuring #From #Maareesan is Out Now! 😎🎶
A @thisisysr Musical 🎶
🎙️ @MathichiyamBala
✍🏻 @madhankarky #FaFa #Vadivelu #SudheeshSankar @SuperGoodFilms_… pic.twitter.com/i53u2HHunT— Saregama South (@saregamasouth) July 9, 2025
மாரீசன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :
நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் இவர்கள் இருவரின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இதையும் படிங்க : முதல் படத்தில் என்னைத் தூக்கிட்டாங்க.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!
இந்த படமானது தமிழ் மற்றும் மலையாள மொழிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், மேலும் நடிகர்கள் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்ரா, லிவிங்ஸ்டன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க :கூலி படத்தின் 2-வது பாடல்… இன்று மாலை வெளியாகும் சூப்பர் அப்டேட்!
இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, ஜூலை 16ம் தேதியில் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் பற்றியும் படக்குழு அறிவிப்பை வெளியிடும் என் எதிர்பார்க்கப்படுகிறது.