பாராட்டுக்களை குவிக்கும் சிவகார்த்திகேயனின் ஹவுஸ்மேட்ஸ் படம்!
ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் ஆகஸ்ட் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படமாக இருக்கும் என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கிங்டம். இந்தப் படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர், புரமோஷன் நிகழ்ச்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. தினம் தினம் இப்படம் தொடர்பான அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்படம் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் பார்க்கலாம். கோலிவுட்டில் அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கும் படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன் ரியாக்ஷன் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்களை பார்க்கலாம். இன்னும் சில புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகளையும், ஓடிடி பட ரிவியூக்கள் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் பார்க்கலாம்
மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்
LIVE NEWS & UPDATES
-
செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி – வெளியான டீசர் அப்டேட்
செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2 பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க, அனஸ்வரா ராஜன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் 2 நிமிடங்கள் கொண்ட டீசர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிங்டம்.. கூலி படங்களுக்கு நானி வாழ்த்து
நடிகர் நானி தனது எக்ஸ் பக்கத்தில் கிங்டம், காந்தா, வார் 2, கூலி படங்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ”கௌதம் தின்னனுரி, அனிருத், வம்சி ஆகியோரின் கிங்டம், என் சொந்த படம் போன்ற உணர்வை தருகிறது. அந்தப் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. துல்கர் சல்மான் மற்றும் ராணாவின் காந்தா டீசர் வெறித்தனமாக இருக்கிறது. வார் 2 மற்றும் கூலி படங்களை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
டெங்கு காய்ச்சல் காரணமாக நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி
நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
-
பவன் கல்யாணின் OG – தமன் இசையில் பாடும் சிம்பு
பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது சுஜித் இயக்கத்தில் OG படத்தில் நடித்து வருகிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்துக்காக ஃபயர் ஸ்டோர்ம் என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல் ஆகஸ்ட் 3, 2025 அன்று வெளியாகவிருக்கிறது.
-
சிம்பு – வெற்றிமாறன் பட ஷூட்டிங் அப்டேட்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர், 2025 முதல் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்காக சிம்பு 10 கிலோ வரை எடை குறைக்கிறார். முன்னதாக சம்பள பிரச்னை காரணமாக இந்தப் படத்தில் சிம்பு விலகுவதாக கூறப்பட்டது.
-
நாளைய நாள் உங்களுடையது….. ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் மதராஸி. இந்தப் படத்தின் முதல் பாடல் ஜூலை 31, 2025 மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன், அனிருத் இடம் பெற்ற புரமோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் இந்தப் பாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சிறப்பான விஷயங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளை உங்களுடையது என குறிப்பிட்டுள்ளார்.
-
தனது பிளேலிஸ்டை பகிர்ந்த சந்தோஷ் நாராயணன்!
சந்தோஷ் நாராயணன் இசையில் ரெட்ரோ, தலைவன் தலைவி பட பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கம் வாயிலாக சந்தோஷ் நாராயணனின் பிளேலிஸ்டை கேட்டிருந்தார். இந்த நிலையில் சற்றும் தாமதிக்காமல் சந்தோஷ் நாராயணன் தனது ஸ்பாட்டிஃபை பிளே லிஸ்டை பகிர்ந்து கொண்டார்.
பிளேலிஸ்டை பகிர்ந்த சந்தோஷ் நாராயணன்
This is one of them 🥁🥁https://t.co/sO0pdnIkTd
— Santhosh Narayanan (@Music_Santhosh) July 30, 2025
-
போஸ்டர் வெளியிட்டு இதயம் முரளி படக்குழு ப்ரீத்தி முகுந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கி வரும் படம் இதயம் முரளி. இந்தப் படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், காயடு லோஹர், நிஹாரிகா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இதய முரளி. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதயம் முரளி படக்குழு ப்ரீத்தி முகுந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.
ப்ரீத்தி முகுந்தனுக்கு பிறந்த நாள் தெரிவித்த இதயம் முரளி படக்குழு
Birthday wishes to the pretty @PreityMukundan , from the entire team of #IdhayamMurali ♥️
Her charm and talent light up the frame every time, sending her more love pic.twitter.com/KN4NZrNWVq
— DawnPictures (@DawnPicturesOff) July 30, 2025
-
ஜான்வி கபூரின் பரம் சுந்தரி பட போஸ்டர் !
துஷார் ஜலோதா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹாோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள பரம் சுந்தரி படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேரளத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 29, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் பரம் சுந்தரி போஸ்டர்
View this post on Instagram -
விறுவிறுப்பாக தொடங்கிய கூலி பட புரமோஷன் – சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. கூலி பட லேபிள்கள் தயாரிக்கும் பணிகள் தொடர்பான வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூலி படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ
The first time ever for an Indian movie!🔥#Coolie Promotions in full swing across India ! 💥#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv… pic.twitter.com/v9i1gtTRvV
— Sun Pictures (@sunpictures) July 30, 2025
-
சென்னையில் நடிகர் ஜெய்சங்கர் பெயரில் சாலை
சென்னையில் நடிகர் ஜெய்சங்கர் வாழ்ந்த கல்லூரி பாதை சாலை அவரது நினைவாக ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. நடிகர் ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்பட்டவர். அவரது ஆக்சன் படங்கள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
-
ஹவுஸ் மேட்ஸ் படத்துக்கு ஷான் ரோல்டன் பாராட்டு!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பு. எழுத்து, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் நடிப்பு என அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. இது கட்டாய வெற்றி படமாக இருக்கும் என்றார்.
-
ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆரின் வார் 2 – பாடல் அப்டேட்
ஹிருத்திக் ரோஷன், ஜூனயர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள படம் வார் 2. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து நீ எந்தன் உலகென என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தமிழில் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
-
வசந்த் ரவியின் இந்திரா – முதல் பாடல் தொடர்பான அறிவிப்பு
வசந்த் ரவி ஹீரோவாக நடித்து வரும் படம் இந்திரா. இந்தப் படத்தின் முதல் பாடல் ஜூலை 31, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சபரிஷ் நந்தா இயக்கியுள்ள நிலையில், அஜ்மல் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஜேஎஸ்எம் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
-
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி பெற்று மோசடி செய்ததாகக் கூறி நடிகர் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் அவர் மீது பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
-
Coolie: மோனிகா பாடலில் பூஜா ஹெக்டேவின் ஆடையின் விலை இவ்வளவா?
கூலி படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா பாடல் சமூக வலைதலங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பாடலில் நடிகை பூஜா ஹெக்டே அணிந்துள்ள உடை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த உடையின் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ஜனநாயகனில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக நடிக்கிறேன் – பிரபல நடிகர் தகவல்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மமிதா பைஜூ, பிரியாமணி, டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் தான் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக நடிப்பதாக டிஜே அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
-
நடிகை ப்ரீத்தி முகுந்தனுக்கு பிறந்த நாள்
தமிழில் ஸ்டார் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இவரது நடிப்பில் தெலுங்கில் கன்னப்பா என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது தமிழில் இதயம் முரளி, மலையாளத்தில் மெயின் பியார் கியா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மெயின் பியார் கியா படத்தில் இருந்து ப்ரீத்திக்கு வாழ்த்து சொல்லி போஸ்டர் வெளியாகியுள்ளது.
-
காஞ்சனா 4 படப்பிடிப்பு தளத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷுடன் பூஜா ஹெக்டே
ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் 3 பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அவருடன் டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷுடன் பூஜா ஹெக்டே
#PoojaHegde & Tourist Family Kamalesh from the sets of #Kanchana4 📸♥️ pic.twitter.com/q5ugBiojhn
— AmuthaBharathi (@CinemaWithAB) July 30, 2025
-
ஹவுஸ்மேட்ஸ் படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய ஜீ5
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹவுஸ்மேட்ஸ், ராஜவேல் இயக்கியிருந்த இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிரஸ் ஷோவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
-
இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமீன்!
வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த விவகாரத்தில், இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் வழங்கி நாகை கீழ்வேளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோகன் ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக கூறி இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
-
கூலி படம் வெளியாகும் அடுத்த நாள் என் பிளான் இது தான் – லோகேஷ் கனகராஜ்
கூலி படம் வெளியாகும் அடுத்த நாள், தான் நண்பர்களுடன் பாலி சென்றுவிடுவேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு படம் தொடர்பான தகவல்கள விமர்சனங்கள் எதையும் பார்க்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
-
போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக இளைஞரிடம் விசாரணை
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக இளைஞரை துப்பாக்கியால் போலீசார் சுட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரிடம் ஆலங்குளம் நீதித்துறை நடுவர் நேரில் விசாரணை செய்தார். அந்த இளைஞருக்கு ஆகஸ்ட் 12 வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமேசான் டெலிவரி பாக்ஸில் கூலி பட புரமோஷன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அமேசான் டெலிவரி பாக்ஸில் கூலி படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன. சன் பிக்சர்ஸின் இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
-
3 ஆண்டு காலத்தில் தான் பல அவமானங்கள்.. இயக்குநர் பாண்டிராஜ் வேதனை
தலைவன் தலைவி படத்தின் மூலம் 3 ஆண்டுகள் கழித்து இயக்குநர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். இந்த 3 ஆண்டு காலத்தில் தான் பல அவமானங்கள், கடினமான தருணங்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமான கதிர்.. முதல் படம் ரிலீஸ் தேதி இதோ!
மதயானைக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கதிர். தனித்துவமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவர் மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவரின் முதல் படமான மீஷா ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகவுள்ளது.
-
கூலி படத்தின் மோனிகா பாடல்.. பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடை விலை இவ்வளவா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளார். அனிருத் இசையில் மோனிகா என்ற பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடை ரூ.5 லட்சம் விலை மதிப்பு கொண்டது என தெரிய வந்தது.
-
ரிஷப் ஷெட்டியின் அடுத்தப்படம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
காந்தாரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமான ரிஷப் ஷெட்டியின் அடுத்தப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அஸ்வின் கங்காராஜூ இயக்கவுள்ளார்.
-
Silambarasan TR: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் சிலம்பரசன் டிஆர்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 49வது படத்தின் அப்டேட் தியேட்டரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. வடசென்னை படம் நிகழ்ந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
நான் அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரானவன் – நடிகர் சத்யராஜ்
நான் அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என சமீபத்தில் மறைந்த இயக்குநர் வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் என்னை இந்து கடவுளுக்கும் நம்பிக்கைக்கும் மட்டும் எதிரானவனாக நினைக்கிறார்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
-
மைசா படத்தின் பூஜை..பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராஷ்மிகா
ரவீந்திரபுள்ளே இயக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடிக்கும் படம் “மைசா”. இந்த படத்தின் பூஜையில் அவர் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினார். மாறுபட்ட தோற்றத்தில் ராஷ்மிகா நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகியிருந்தது.
-
இதுவரை 30 லட்சம் பேரை பிளாக் செய்துள்ளேன்.. நடிகை அனுசுயா பரத்வாஜ்
யாராவது என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால் அவர்களை சமூக வலைத்தளங்களில் இருந்து பிளாக் செய்து விடுவேன் என பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இதுவரை 30 லட்சம் பேரை தான் பிளாக் செய்துள்ளாதாகவும் கூறியுள்ளார். மேலும் கடுமையான பதிலடியும் கொடுப்பேன் என அனுசுயா கூறியுள்ளார்.
-
பரபரப்பை ஏற்படுத்திய வசந்த் ரவியின் இந்திரா பட போஸ்டர்!
தரமணி, ராக்கி, ஜெயிலர் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர் வசந்த் ரவி அடுத்ததாக இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் இந்திரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஹீரோ, ஹீரோயின் இருவரும் லிப் லாக் முத்த காட்சி போஸ்டராக வெளியாகியுள்ளது.
-
உஸ்தாத் பகத்சிங் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த பவன் கல்யாண்!
ஆந்திராவின் பவர் ஸ்டாரான நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் ஹரிஹர வீரமல்லு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து ஓஜி, உஸ்தாத் பகத்சிங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் உஸ்தாத் பகத்சிங் படத்தின் தனது காட்சிகளுக்கான ஷூட்டிங்கை அவர் நிறைவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஆசை – நடிகை ஆர்ஷா சாந்தினி
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் படம் 2025, ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயினாக பிரபல மலையாள நடிகை ஆர்ஷா சாந்தினி நடித்திருக்கிறார். இவர் நேர்காணல் ஒன்றில் எதிர்காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூட்யூப் தளத்தில் வெளியாகும் சித்தாரே ஜமீன்பர்.. இதுதான் காரணம்
தாரே ஜமீன்பார் படத்தின் அடுத்த பாகமான சித்தாரே ஜமீன்பார் படம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் யூட்யூப் தளத்தில் காண முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆமீர்கான் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜெனிலியாவும் நீண்ட இடைவெளிக்குப் பின் இடம் பெற்றிருந்தார். மனநலம் பாதித்த மாணவர்களை மையப்படுத்திய இந்த படமானது தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
-
Dhanush Movie : டி54 ன் படப்பிடிப்பு தள புகைப்படம்
தனுஷின் அடுத்தப்படமான “டி54” ன் படப்பிடிப்பு தள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிவருகிறார்
ஷூட்டிங் போட்டோ
Straight from the sets of #D54 – Shoot in progress! @dhanushkraja 🔥 pic.twitter.com/9qbUYo28xV
— Vels Film International (@VelsFilmIntl) July 29, 2025
-
“சலம்பல” பாடலின் ப்ரோமோ
பாடகர் சாய் அபயங்கரின் குரலில், “சலம்பல” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது வரும் 2025, ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
படக்குழு கொடுத்த அப்டேட்
Vibe check – blast 💥#Madharaasi goes MAD with the first single – check out the promo here!
▶️ https://t.co/d8ZLyfgnZK#Madharaasi first single #Salambala out on July 31st at 6 PM 🤙🏻
An @anirudhofficial banger 🥁
Sung by @SaiAbhyankkar
Lyrics by #SuperSubu #DilMadharaasi… pic.twitter.com/HMArN6nhLO— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) July 29, 2025
-
மதராஸி பட ட்ரெண்டிங்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் உருவாகியிருக்கும் மதராஸி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என கூறப்படுகிறது
-
Kingdom Movie Pre Booking : கிங்டாம் பட புக்கிங் சாதனை
கிங்டாம் படத்துக்கு முன்பதிவுகளும் அதிகமாகி வருகின்றன. புக் மை ஷோவில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் 30 ஆம் தேதி பிரீமியர் ஷோக்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு ஏற்கனவே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
-
ரஜினி படம் போல மாஸ் – விஜய் தேவரகொண்டா
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பழைய ஆக்சன் படங்கள் அளவுக்கு இந்தப் படம் மாஸாக அமைந்திருக்கிறது. படம் பார்த்த அனிருத் இந்தப் படம் எனது கேரியரில் மைல்ஸ்டோனாக இருக்கும் என்று தெரிவித்ததாக பகிர்ந்துகொண்டார்.
-
Kingdom Movie Update: பக்கா ஆக்ஷனாக இருக்கும்
தென்னிந்திய அளவில் விஜய் தேவரகொண்டாவின் Kingdom டிரெய்லர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிரெய்லர் வெளியீட்டிற்கு பிறகு கிங்டம் படம் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. டிரெய்லரின் ஒவ்வொரு ஃபிரேமும் கிங்டம் பக்கா ஆக்சன் படமாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது.
Published On - Jul 30,2025 8:07 AM