Entertainment News Live Updates: முதல் நாளில் ரூ.100 கோடி வசூலிக்குமா ரஜினிகாந்த்தின் கூலி?
Entertainment News in Tamil, 22 July 2025, Live Updates: நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை இந்திய அளவில் 5000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்
LIVE NEWS & UPDATES
-
ரெட்ரோ படத்தின் பின்னணி இசை – சந்தோஷ் நாராயணன் அறிவிப்பு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பின்னணி இசை, ஜூலை 22, 2025 அன்று நள்ளிரவில் வெளியாகும் என சந்தோஷ் நாராயணன் அறிவித்துள்ளார்.
-
கூலி படத்தில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகிறது. இந்த நிலையில் கூலி படத்தில் நடிகர் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதல் நாளில் ரூ.100 கோடி வசூலிக்குமா ரஜினிகாந்த்தின் கூலி?
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தை இந்திய அளவில் 5000 திரையரங்குகளில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
-
ரஜினிகாந்த்தின் கூலி டிரெய்லர் எப்போது?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கூலி. ஆமிர் கான் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 2, 2025 அன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தங்கலான் படத்தின் பின்னணி இசையை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2024 ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார்.
தங்கலான் படத்தின் பின்னணி இசையை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்
The most requested #thangalaan OST is here https://t.co/7ZCFMyoEtQ
— G.V.Prakash Kumar (@gvprakash) July 22, 2025
-
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் டிரெய்லர் – வெளியான அப்டேட்
கௌதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள கிங்டம் படத்தின் டிரெய்லர் வருகிற ஜூலை 27 அன்று திருப்பதியில் வெளியிடப்படவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக திருப்பதியில் பிம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.
கிங்டம் பட டிரெய்லர் அப்டேட்டை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா
#KINGDOM
Trailer is coming.JULY 26th – Tirupati 🙏❤️ pic.twitter.com/a5t3mZukeU
— Vijay Deverakonda (@TheDeverakonda) July 22, 2025
-
அம்பிகாபதி கிளைமேக்ஸ் மாற்றம் – தனுஷ் எதிர்ப்பு!
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ராஞ்சனா. இந்தப் படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 1, 2025 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் தனுஷ் இறந்து விடும் நிலையில், அதனை ஏஐ உதவியுடன் மாற்றி, தனுஷ் – சோனம் கபூர் இணைவது போல மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனுஷும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளாராம்.
-
சென்னை ரோகினி திரையரங்கில் சூர்யாவின் கருப்பு டீசர் கொண்டாட்ட நிகழ்ச்சி
ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் கருப்பு. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் சூர்யாவின் கருப்பு பட டீசர் கொண்டாட்ட நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
-
உதவி இயக்குநர்களின் குழந்தைகளின் படிப்புக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி!
இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த்தின் மகளுமாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இணை மற்றும் உதவி இயக்குநரின் குழந்தைகள் 102 பேரின் பள்ளி மற்றும் கல்லூரி செலவுகளுக்காக ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். அப்போது இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உடனிருந்தார். அவரது செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
-
ஜெய் பீம் பட வெற்றியால் கைவிடப்பட்டப் படம் – மணிகண்டன் சுவாரசியத் தகவல்!
நடிகர் மணி கண்டன் சில படங்களில் வசனகரத்தாவாகவும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் நரை எழுதும் சுயசரிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் தனக்கு ஜெய் பீம் படத்துக்கு பிறகு இயக்க வாய்ப்பு வந்ததாகவும், அந்தப் படத்தை இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிக்கவிருந்ததாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஜெய்பீம் படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
-
சூர்யா -ஆர்ஜே பாலாஜியின் கருப்பு டீசர் – வெளியான சூப்பர் அப்டேட்!
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தின் டீசர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலைலயில் இந்தப் படத்தின் டீசருக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் டீசர் 1 நிமிடம் 38 நொடிகள் ஓடக் கூடியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கூலி படத்தின் பவர் ஹவுஸ் பாடல் – வெளியான புதிய புரமோ வீடியோ!
ரோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஆமிர் கான் உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற ஆக்ஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவிருக்கிற படம் கூலி. அனிருத் இசையில் ஏற்கனவே சிக்கிட்டு வைப், மோனிகா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தில் இருந்து கூலி பவர் ஹவுஸ் என்ற பாடல் ஜூலை 22, 2025 அன்று ஹைதராபாத்தில் வெளியிடப்படவிருக்கிறது. இதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் ஹைதராபாத் சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
-
ஹவுஸ் மேட்ஸ் படத்தின் முதல் பாடல் அப்டேட்!
சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ். ராஜவேல் எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, நேரம், பிரேமம் படங்களின் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் ஜூலை 22 , 2025 மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
-
சிவகார்த்திகேயனின் பராசக்தியில் இணைந்த ராணா!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ராணா டகுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குடும்பஸ்தன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் இல்லை – மணிகண்டன் ஓபன் டாக்!
ராஜேஸ்வர் இயக்கத்தில் மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜனவரி 24, 2025 அன்று வெளியான படம் குடும்பஸ்தன். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று, இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தப் படத்தில் முதலில் மணிகண்டனுக்கு பதிலாக அசோக் செல்வன் நடிப்பதாக இருந்ததாம். இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மணிகண்டன், அசோக் செல்வனுக்கு தான் இந்தக் கதை சொல்லப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு கால்ஷீட் இல்லாததால் அவர் எனக்கு சொன்னார் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பவன் கல்யாணின் ஹர ஹர வீர மல்லு படத்தின் டிக்கெட் விலை உயர்வு!
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் ஹல்யாண் நடித்துள்ள ஹர ஹர வீர மல்லு திரைப்படம் வருகிற ஜூல 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரீமியர் காட்சிக்கு தெலங்கானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி இந்தப் படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ஜூலை 23, 2025 அன்று திரையிடப்படவிருக்கிறது. இதற்கான கட்டணம் ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் மூன்று நாளுக்கு மல்டிபிளெக்ஸ்களில் இந்தப் படத்துக்கு ரூ.200 என டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் தொடங்கிய பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு !
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் வேட்டுவம். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் மரணமடைந்த நிலையில் இந்தப் படத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
-
ஹிருத்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆரின் வார் 2 பட டிரெய்லர் அப்டேட்
ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள வார் 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று ரஜினிகாந்த்தின் கூலி படத்துடன் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையிில் இந்தப் படத்தின் டிரெய்லர் ஜூலை 25, 2025 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார்.
-
ராமின் ‘பறந்து போ’ – இதுவரை மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூலை 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் 17 நாட்களில் ரூ. 8.75 கோடி வசூலித்துள்ளது. இது இயக்குநர் ராம் படங்களின் அதிகபட்ச வசூல் என கூறப்படுகிறது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார்.
-
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் – உறுதி செய்த சாம் சிஎஸ்
ஹெச்.வினோத் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வரும் இந்தப் படம், 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதனை சமீபத்திய பேட்டியில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உறுதி செய்திருக்கிறார்.
-
அமெரிக்காவில் தொடங்கிய கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கூலி”. இந்த படம் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன்பதிவானது அமெரிக்காவில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Dhanush: ரசிகர்களை சந்திக்கும் தனுஷ்.. அடுத்து அரசியல் தானா?
முன்னணி நடிகர்கள் பாணியில் பிரபல நடிகரான தனுஷ் சென்னையில் வாரந்தோறும் 500 ரசிகர்களை சந்தித்து உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சாலிகிராமம் பகுதியில் 25 வாரங்களுக்கு ஸ்டூடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Housemates: ஹவுஸ்மேட்ஸ் படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன் நடித்து வரும் ஹவுஸ்மேட்ஸ் படத்தின் முதல் பாடலான “அக்கலு பக்கலு” இன்று (ஜூலை 22) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.
-
ஓடிடி தளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சட்டமும் நீதியும்!
ஜீ5 ஓடிடி தளத்தில் நடிகர் சரவணன் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள சட்டமும் நீதியும் வெப் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி வெளியானது. இப்படியான நிலையில் இதுவரை 51 மில்லியன் பார்வைகளை இந்த வெப் தொடர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குடும்பஸ்தன் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர்தானா?
மணிகண்டன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த குடும்பஸ்தன் படத்தில் முதலில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தன்னிடம் தேதி இல்லாததால் தன்னை பரிந்துரை செய்ததாக மணிகண்டன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
-
HBD YogiBabu: நடிகர் யோகிபாபு பிறந்தநாள்.. குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உள்ள யோகிபாபு இன்று (ஜூலை 22) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் ஆண்டனியின் மார்கன் படம்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
லியோ ஜான்பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்த மார்கன் படம் வரும் ஜூலை 25ம் தேதி டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. இந்த படம் ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
-
Shilpa Shirodkar: நான் 10ம் வகுப்பு பெயில்.. மனம் திறந்த நடிகை ஷில்பா ஷிரோத்கர்
இந்தி திரையுலகில் சில படங்களே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ஷில்பா ஷிரோத்கர் திருமண வாழ்க்கையால் சினிமாவில் இருந்து விலகினார். மேலும் ஒரு நேர்காணலில் தான் 10ம் வகுப்பு பெயில் என்பதையும், தனது கணவர் எம்பிஏ டபுள் டிகிரி முடித்தவர் எனவும் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.
-
தனுஷூடன் இணையும் ஹெச்.வினோத்.. உறுதி செய்த சாம்.சி.எஸ்
இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் விஜய்யை வைத்து ஜனநாயகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிகர் தனுஷூடன் ஒரு படம் இணையவுள்ளதாகவும், அதற்கு தான் இசையமைப்பதாகவும் இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
Avatar 3: அவதார் படத்தின் அடுத்த பாகம்.. புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்ற அவதார் படத்தின் 3ம் பாகமான அவதார்: பயர் அண்ட் ஆஷ் வரும் 2025, டிசம்பர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
-
Rashmika Mandanna: தொழில்துறையில் அடியெடுத்து வைக்கும் ராஷ்மிகா மந்தனா
நேஷனல் கிரஷ் எனப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவை தொடர்ந்து தொழில்துறையில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எந்த தொழிலில் முதலீடு செய்யப்போகிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Raashii Khanna: பவன் கல்யாண் படத்தில் நடிகை ராஷி கண்ணா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ராஷி கண்ணா சமீபகாலமாக பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். இப்படியான நிலையில் அவர் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.
-
ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி
வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டாண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் ஷூட்டிங் நடக்கும்போதே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு பலரும் உதவி செய்து வரும் நிலையில், வேட்டுவம் இயக்குநர் ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார்
-
மோசமான செயல் – அம்பிகாபதி இயக்குநர் வருத்தம்
இது குறித்து பேசியுள்ள இயக்குநர், இது மிகவும் மோசமான செயல். எனது படைப்பு சுத்திரம் பறிக்கப்பட்டது போல உணர்கிறேன். ரசிகர்களால் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ஏற்றுக்கொண்டு அவர்கள் கொண்டாடி வரும் கிளைமேக்ஸ் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இது படத்தை மட்டுமல்ல ரசிகர்களின் ரசனையைும் கேள்விக்குறியாக்குகிறது என்றார்
-
அம்பிகாபதி ஏஐ மாற்றம் – கொதிக்கும் இயக்குநர்
அம்பிகாபதி திரைப்படம் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏஐ உதவியுடன் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் மாற்றப்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
-
ஓவர் கூட்டம் வரலாம் – இடத்தை மாற்றும் அனிருத்
டிக்கெட்டுக்கு அதிகம் டிமாண்ட் இருப்பதாலும், அப்படியானால், நினைத்ததை விட கூட்டம் அதிகம் வரும் என்பதால், இன்னும் பெரிய இடத்தில் concert நடத்த இடம் மாற்றப்படுவதாக அனிருத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Anirudh Concert : அனிருத் கான்செர்ட் தள்ளி வைப்பு
படத்துக்கு இசை அமைப்பது மட்டுமின்றி அனிருத்தின் Concert நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னையில் ஜூலை 26 நடக்க இருந்த Concert தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது
-
Coolie Movie : கூலி படம் செய்யப்போகும் சாதனை?
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து கோலிவுட்டின் பார்வை கூலி படம் மீது விழுந்துள்ளது
-
Indian 3 Movie : டிசம்பரில் ரிலிசாகிறதா இந்தியன் 3?
கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 வெளியாகுமா எனக் கூறப்பட்டது. ஆனால் வரும் டிசம்பர் மாதம் இந்தியன் 3 வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது
-
Suriya Movie Update : கருப்பு பட டீசர் விவரம்
நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை ஜூலை 23ம் தேதி கொண்டாட உள்ளார். இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் (Actor Suriya) பிறந்தநாள் ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது நாளை. இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. அவர் நடிப்பில் ரிலீசாகவுள்ள படத்தின் அப்டேட்களும் வர காத்திருக்கின்றன. சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் இந்த கருப்பு படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வருகின்றன வீக் எண்டை கொண்டாடும் விதமாக கோலிவுட்டில் 2 படங்கள் எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸாகவுள்ளன. வடிவேலு, (Vadivelu) பகத் நடித்துள்ள மாரீசன் மற்றொன்று விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடித்துள்ள தலைவன் தலைவி. இந்த 2 படங்களும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இரண்டுமே ட்ராமா மாதிரியான ஜார்னர் என்பதால் இரண்டுமே ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது.
உலக நாடுகளிலும் தங்களது திறமையை கோலிவுட் நடிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.