டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிக்குமாரின் மகனாக நடித்த மிதுன் ஜெய் சங்கர் யார் தெரியுமா?
Tourist Family: மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ரெட்ரோ மற்றும் ஹிட் 3, ரெய்ட் 2 ஆகிய படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அறிமுக இயக்குநரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி
நடிகர் சசிகுமார் நடிப்பில் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். இவர்களது மகன்களாக நடிகர் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் இருவரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்கள் ஆவார். இலங்கையில் இருந்து வாழ்வாதாரத்தை தேடி தமிழகத்திற்கு வந்த சசிகுமாரின் குடும்பம் எப்படி தமிழ் நாட்டில் வாழ்க்கையை நடத்துகிறது என்பதே படத்தின் கதை. இது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் தனித்தனியாக பாராட்டும் அளவிற்கு அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருந்தனர். குறிப்பாக சசிகுமார் மற்றும் சிம்ரனின் மகன்களாக நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் இருவரின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில் கமலேஷ் முன்னதாக ராட்சசி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மிதுன் செய் சங்கர்?
இந்த நிலையில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் மூத்த மகனாக நடித்த மிதுன் ஜெய் சங்கர் யார் என்று தமிழ் ரசிகர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். மேலும் பலர் இவரை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆம் மலையாளத்தில் நடிகர் பகத் ஃபாசிலின் ஆவேசம் படத்தைப் பார்த்தவர்களுக்கு இவரை தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது.
2024-ம் ஆண்டு நடிகர் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி பான் இந்திய அளவில் ஹிட் அடித்தப் படம் ஆவேசம். இதில் பேங்களூரில் கல்லூரியில் படிக்கும் மூன்று நண்பர்கள் தங்களை ராகிங் செய்துஅடித்த சீனியர்களை திருப்பி அடிக்க லோக்கல் ரௌடிகளின் ஆதரவைப் பெற நினைக்கிறார்கள்.
மிதுன் ஜெய் சங்கர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
அப்படி அவர்கள் தேடிக் கண்டுபிடித்து பேங்களூரையே ஆளும் பெரிய கேங்க்ஸ்டரான ரங்கா. இந்த ரங்கா கதாப்பாத்திரத்தில் நடிகர் பகத் ஃபாசில் நடித்திருந்தார். பகத் உடன் ஏற்பட்ட நட்பிற்கு பிறகு என்ன நடந்தது என்பது படத்தின் கதை. இதில் மூன்று கல்லூரி நண்பர்களின் பிபி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் மிதுன் ஜெய் சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.