வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் இன்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் அவரது 44-வது படமான ரெட்ரோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் 45-வது படத்திற்காக சூர்யா நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யா
இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராம்கி, சாய் குமார், சச்சின் கெடேகர், ரகு பாபு, சர்வதாமன் டி. பானர்ஜி மற்றும் ஒய். காசி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளினாது. படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் பான் இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக தமிழ் சினிமாவில் அதே நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியானதால் தமிழகத்தில் பெரிய அளவில் திரையரங்குகள் முதலில் ஒதுக்கப்படவில்லை. ஆனால் லக்கி பாஸ்கர் படம் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியதும் தமிழகத்தில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.
நெட்ஃபிளிக்ஸில் லக்கி பாஸ்கர் செய்த சாதனை:
திரையரங்குகளில் வெளியான லக்கி பாஸ்கர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான போதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தென்னிந்திய மொழியில் இதுவரை நெட்ஃபிளிக்ஸில் வெளியான படங்களில் இந்தப் படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அது என்ன என்றால் இதுவரை தென்னிந்திய மொழியில் வெளியான படங்கள் எதுவும் நெட்ஃபிளிக்ஸில் தொடர்ந்து 13 வாரங்கள் முன்னணி வகித்தது இல்லை. அந்த சாதனையை முதன்முறையாக லக்கி பாஸ்கர் படம் படைத்தது படக்குழுவினர் மட்டும் இன்றி ரசிகர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணி:
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா இந்த கூட்டணியை உறுதி செய்தார்.
அதன்படி ரெட்ரோ படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்ட நடிகர் சூர்யா ஹைதரபாத்தில் ரசிகர்களை சந்தித்தப் போது இயக்குநர் வெங்கி அட்லூரியும் தனது 46-வது படத்திற்காக இணைந்துள்ளதை உறுதி செய்தார். இந்த அப்டேட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மே மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சூர்யா தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வம்சி தயாரிக்க உள்ளதாகவும் நடிகர் சூர்யா அந்த அறிவிப்பின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த் அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக வைரலாகி வருகின்றது.