சமந்தா – ராஜ் நிதிமோருவின் திருமணம்.. ஷாக்கிங் பதிவை வெளியிட்ட ராஜின் முன்னாள் மனைவி!
Raj Nidimoru Ex-wife Reaction: பான் இந்திய சினிமாவில் பேமஸ் நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் இன்று 2025 டிசம்பர் 1ம் தேதியில் இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ராஜ் நிதிமோருவின் முன்னாள் மனைவி ஷாமிலி வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்யாமிலி, ராஜ் நிடிமோரு மற்றும் சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காவிட்டாலும், அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மட்டும் குறையவே இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் இன்று 2025ம் டிசம்பர் 1ம் தேதியில் கோவையில் (Coimbatore) உள்ள ஈஷாவில் (Isha), தனது நீண்டநாள் காதலரான இயக்குநர் ராஜ் நிதிமோருவை (Raj Nidimoru) 2வது திருமணம் செய்துள்ளார். இவருக்கும் இது 2வது திருமணம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்துவருவதாக கூறப்பட்டுவந்தது. மேலும் சமந்தாவும் இவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவந்தார். இந்நிலையில் இவர்கள் காதலிப்பதாகவும் எங்கேயும் அறிவிக்கவில்லை.
மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தங்களின் திருமணத்தை சமந்தா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று திருமணம் செய்துள்ள நிலையில், இயக்குநர் ராஜ் நிதிமோருவின் முன்னாள் மனைவி ஷியாமிலி (Shhyamli) வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த பதிவில் அவர் அப்படி என்ன தெரிவித்துள்ளார் என பார்க்கலாம்.
இதையும் படிங்க : 15 ஆண்டுகளை நிறைவு செய்த மைனா படம்… டி இமான் வெளியிட்ட பதிவு
இணையத்தில் வைரலாகும் ஷாமிலியிலின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் :
இந்த பதிவில் ராஜ் நிதிமோருவின் முன்னாள் மனைவி ஷியாமிலி, “நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையற்ற செயல்களை செய்கிறார்கள்” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு இருவரும் திருமணம் செய்திருக்கும் நிலையில், தற்போது இவரின் பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சமந்தா பகிர்ந்த தனது திருமணம் தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு :
நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிதிமோரு சில ஆண்டுகளாகவே காதலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துவந்தன. இந்நிலையில் இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. நடிகை சமந்தா ரூத் பிரபுவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துகொண்டிருந்தார்.
இதையும் படிங்க : சர்வதேச திரைப்பட விழாவில் காந்தாரா படம் குறித்து ரன்வீர் சிங் செயலால் கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் அவர்கள் இருவரின் திருமணம் நிறைவடைந்து 1 வருடம் கூட முடியாத நிலையில், நடிகை சமந்தாவும் 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான தகவல் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.