ரவி மோகனின் தனி ஒருவன் 2 படம் எப்போது தொடங்கும்? இயக்குநர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட்

Thani Oruvan 2 Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருக்கும் மோகன் ராஜா சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது தனி ஒருவன் 2 படம் எப்போது தொடங்கும் என்று மோகன் ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரவி மோகனின் தனி ஒருவன் 2 படம் எப்போது தொடங்கும்? இயக்குநர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட்

தனி ஒருவன் 2

Published: 

19 May 2025 16:17 PM

இயக்குநர் மோகன் ராஜா (Director Mohan Raja) இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தனி ஒருவன். இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் . நயன்தாரா , தம்பி ராமையா , கணேஷ் வெங்கடராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், ராகுல் மாதவ், நாகிநீடு, மதுசூதன் ராவ், சைஜு குருப், நாசர் மற்றும் முக்தா கோட்சே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரியாக இருக்கும் நடிகர் ரவி மோகன் நாட்டின் மிகப்பெரிய குற்றவாளியான நடிகர் அரவிந்த் சாமியின் குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட்:

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த தனி ஒருவன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் காரணமாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை 2023-ம் ஆண்டு படக்குழு வெளியிட்டது. இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆனால் அதனைத் தொடர்ந்து எந்த அப்டேட்டும் வெளியாகமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் விழா ஒன்றில் கலந்துகொண்டனர். அந்த விழாவில் இயக்குநர் மோகன் ராஜா தனி ஒருவன் 2 படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜாவின் இன்ஸ்டா போஸ்ட்:

அதன்படி தனி ஒருவன் படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் காதல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் அர்ச்சனாவும் தனி ஒருவன் மிகவும் ஸ்பெஷலான படம் என்று தெரிவித்துக்கொண்டே இருப்பார். கூடியவிரைவில் தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் சொன்னதும் படத்தின் வேலைகள் தொடங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகனின் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள்:

நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இவர் கராத்தே பாபு மற்றும் ஜீனி ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இந்த 3 படங்களும் அடுத்தடுத்து ரவி மோகனின் நடிப்பில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.