Lokesh Kanagaraj : ரஜினியுடன் படம் பண்ணக் காரணமே விஜய் அண்ணாதான்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்!
Lokesh Kanagaraj About Thalapathy Vijay : தமிழில் பிரபல இயக்குநராக வலம்வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படமானது உருவாகியுள்ளது. அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் ரஜினிகாந்த்துடன் படம் பண்ணும் ஐடியாவையே விஜய் அண்ணாதான் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களின் நாயகனாக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் கடைசி படமாக ஜன நாயகன் (Jana Nayagan) படமானது உருவாகி வருகிறது . இந்த படத்தைத் தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார். இந்நிலையில் இவரின் நடிப்பிலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj இயக்கத்திலும் இறுதியாக வெளியான படம் லியோ (leo). இந்த படத்தில் விஜய் இரு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் வெளியான போது பிளாஷ்பேக் கதைக்களம் பற்றிய விமர்சனங்கள் வெளியாகிக் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின் இணைந்தது என்றே கூறலாம்.
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் வெளியான மாஸ்டர் (Master) படமும் சரி, லியோ படமும் சரி மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கூலி (Coolie) படத்தின் ஷூட்டிங் முடிந்தது தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், விஜய் அண்ணாதான் தலைவர் ரஜினியுடன் (Rajinikath) படம் பண்ணச் சொன்னார் என்று கூறியுள்ளார். அதை தெளிவாகப் பார்க்கலாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றி கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், லியோ படத்தை இயக்கும்போது, நான் அடுத்த படம் யாருடன் பண்ணுவது என்ற சிந்தனையில் இருந்தேன். அப்போது விஜய் அண்ணாதான் அடுத்த படம் தலைவருடன் பண்ணு, சூப்பராக இருக்கும் என்று கூறினார். நான் உடனே அது எப்படி அண்ணா, அங்கே போனால் என்னை கிட்டக்கூட விடமாட்டார்கள் என்று நான் கூறினேன். இதுதான் லியோ ஷூட்டிங்கின் போது நடந்தது. அதைப்போல ரஜினிகாந்த் சார் உடன் படத்தில் இணைந்த தகவல் தெரிந்தவுடன், விஜய் அண்ணாதான் முதலில் கால் பண்ணி விஷ் பண்ணாரு என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
கூலி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
Arangam Adhirattume, Whistle Parakkattume!🔥💥 #CoolieIn100Days ⏳#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/M8tqGkNIrJ
— Sun Pictures (@sunpictures) May 6, 2025
நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படம்தான் கூலி. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக பல மொழி நடிகர்களுடன், மாறுபட்ட கதைகளத்துடன் தயாராகி வருகிறது. கடந்தது 2024ம் ஆண்டு முதல் தொடங்கிய ஷூட்டிங் கடந்த, 2025, ஏப்ரல் தொடக்கத்தில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணியில் இருந்து வருகிறது. மேலும் ரஜினியின் இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.