Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாழ்க்கை என்னனு புரிய வைத்தார்… ரஜினி குறித்து நெகிழ்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ்!

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ந்து பேசியது வைரலாகி வருகின்றது.

வாழ்க்கை என்னனு புரிய வைத்தார்… ரஜினி குறித்து நெகிழ்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்Image Source: Instagram
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2025 09:10 AM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தற்போது ரஜினிகாந்தை (Rajinikanth) வைத்து கூலி என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனரகராஜ் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூலி படம் குறித்தும் அவரது நடிகர்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் என்னென்ன படங்களை எடுக்க உள்ளார் என்பது குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து வாழ்க்கைகான பாடத்தைக் கற்றுக்கொண்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணியில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூலி படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சுதிர் சீனிவாசனுடன் யூடியூப்பில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல விசயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை மிகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார். அதனை வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. என் வாழ்க்கை குறித்து எனக்கு புரிய வைத்தார்.

நான் என் வாழ்க்கை குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். அழுதேன்… சிரித்தேன்… படப்பிடிப்பில் தினமும் அவரிடம் இருந்து எதாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருந்தேன். தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் சார் மிகவும் நல்லவர். அவர் வாழ்க்கையில் கடந்துவந்த பாதைகளை பற்றி தெரிந்துகொண்டபோது நாமலாம் ஒன்னுமே இல்லனு தோனுச்சு என்றும் தெரிவித்தார்.

மேலும் கூலி படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் சார் நடித்த காட்சி ஒன்றை சத்யராஜ் சாரிடம் காட்டினேன். அதைப் பார்த்த சத்தியராஜ் சார், சிலர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஆனால், ஹீரோவாக வாழக்கூடியவர் ஒருவர் இருந்தால் அது ரஜினி தான் என்று சத்யராஜ் கூறியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கூலி படம் குறித்து பார்க்க வேண்டும் என்றால் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!
அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!...
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!...
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்...
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது......
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்...
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ...
"ஒன்றாக டின்னர் சாப்பிடுங்க" டிரம்ப் சொன்ன விஷயம்
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை......
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?...