AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pooja Hegde : ரெட்ரோவில் அவரின் அர்ப்பணிப்புதான் பேசுகிறது.. பூஜா ஹெக்டேவை புகழ்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

Karthik Subbaraj Praises Pooja Hegde : தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்தான் கார்த்திக் சுப்பராஜ். இவரின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் ரெட்ரோ. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் நேர்காணலில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்பராஜ். நடிகை பூஜா ஹெக்டேவின் அர்ப்பணிப்பைப் பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளார்.

Pooja Hegde : ரெட்ரோவில் அவரின் அர்ப்பணிப்புதான் பேசுகிறது.. பூஜா ஹெக்டேவை புகழ்ந்த கார்த்திக் சுப்பராஜ்!
நடிகை பூஜா ஹெக்டே Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 17 May 2025 16:10 PM IST

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ( Karthik Subbaraj) இயக்கத்தில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya)  பல வருடங்களுக்குப் பின் முழுக்க ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் காதல், ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை என மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hagde) நடித்திருந்தார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியான 3வது படமாகும் இது. இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் போல, பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரமும் படத்தில் முன்னணி வகித்து. இந்த படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. மேலும் நடிகை பூஜா ஹெக்டே, இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய்யின் (Vijay)  ஜன நாயகன் (Jana Nayagan) படத்திலும் லீட் கதாநாயகியாக நடித்தது வருகிறார்.

இந்த படமானது தளபதி விஜய்யின் இறுதி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கி வருகிறது. ரெட்ரோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, படக்குழு மொத்தமாக ஒரு நேர்காணலில் கலந்துகொண்டது. அந்த நேர்காணலில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் என ரெட்ரோ பட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நேர்காணலில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், பூஜா ஹெக்டேவினை புகழ்ந்து பேசியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பூஜா ஹெக்டேவை புகழ்ந்த விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் மிகவும் உற்சாகமாக வந்தார், மேலும் அந்த கதாபாத்திரத்திம் குறித்து நன்கு கேட்டு தெரிந்துகொண்டார். இந்த படத்திற்காக அவர் நடிப்பது மற்றும் மொழி இரண்டிலும் நன்றாகவே பணியாற்றினார். மேலும் அவரின் நடிப்பு, அர்ப்பணிப்பு இந்த படத்தில் பேசுகிறது. ஏனென்றால் அவர் தனக்கு டப்பிங்கை இந்த படத்தில் அவர் பேசியிருந்தார், இந்த விஷயமானது உண்மையிலே பாராட்டிற்குரியதுதான். ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்புதான் பேசுகிறது என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பூஜா ஹெக்டேவை பாராட்டித் தள்ளினார்.

நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ரெட்ரோ படத்தை தொடர்ந்து, நடிகர் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் லீட் ரோலில் ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்திலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் நடிகர் வருண் தவானுடன் பாலிவுட்டிலும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us