Suriya : சூர்யா மேல் ஏன் இவ்வளவு வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் அதிரடி பதில்

Director Karthik Subbaraj : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திக் சுப்பராஜ். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி ஹிட் கொடுத்தப் படம் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யா முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக பார்க்கச் சென்ற கார்த்திக் சுப்பராஜிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு, அவர் அதிரடி பதில் கொடுத்துள்ளார்.

Suriya : சூர்யா மேல் ஏன் இவ்வளவு வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் அதிரடி பதில்

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா

Published: 

12 May 2025 15:26 PM

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் நடிப்பின் நாயகன் சூர்யா (Suriya)  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான இந்த படமானது வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா அருமையான ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde)  நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். இந்த ரெட்ரோ திரைப்படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்த படமானது வெளியாகி 2 வாரங்களாக நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் திரையரங்கு (theater) ஒன்றிற்குச் சென்றுள்ளார். அந்த திரையரங்கில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் மாஸாக பதில் கொடுத்திருப்பார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அதிரடி பதில் :

திரையரங்கில் ரசிகர் ஒருவர் கார்த்திக் சுப்பராஜிடம், “சார் சூர்யா சார் மேல், என் வன்மம், அவரின் படம் வரும்போதும் சரி, அவர் சாதாரணமாக மாணவர்களுக்கு உதவி செய்தாலும் சரி ஏன் அனைவரும் அவர் மீது வன்மத்தைக் காட்டுகிறார்கள்?. மேலும் அவரின் படம் ஹிட்டாக போகுது என்றாலும் அவருக்கு எதிராகப் பல வன்மங்கள் வருகிறதே? என்று கேட்டிருந்தார். அதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் , சூர்யா சார் பெயரைச் சொன்னால் எவ்வளவு சத்தம் வருகிறது என்று பாருங்கள், இந்தப் பிரச்னைகளை எல்லாம் தூசி மாதிரி தட்டி விடுங்கள்” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி பதில் கொடுத்திருப்பார்.

ரெட்ரோ படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படத்திற்கு முன் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா போன்ற படங்கள் கடும் தோல்வியை சந்தித்தது என்றே கூறலாம். இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம், சுமார் ரூ. 400 கோடிகளுக்கு மேல் தயாராகி அந்த அளவிற்கு வசூலைப் பெறவில்லை.

அந்த படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, சூர்யாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான இந்தப் படமானது பெரும் வரவேற்புடன் வெளியாகி, இதுவரை சுமார் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.