பாண்டவர் பூமி படத்துல அந்த காட்சியை வைச்சது தப்புனு தோனுச்சு எனக்கு – சேரன் விளக்கம்

Director Cheran: தமிழ் சினிமாவில் சிறந்தப் படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் முன்னதாக அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாண்டவர் பூமி படத்துல அந்த காட்சியை வைச்சது தப்புனு தோனுச்சு எனக்கு - சேரன் விளக்கம்

சேரன்

Updated On: 

25 May 2025 18:57 PM

இயக்குநர் சேரன் (Director Cheran) இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பாண்டவர் பூமி. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் அருண் விஜய் நடித்து இருந்தார். மேலும் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் ஷமிதா ஸ்ரீ குமார், ராஜ்கிரண். வினு சக்ரவர்த்தி, முகேஷ் திவாரி, சந்திரசேகர், ரஞ்சித், மனோரமா மற்றும் சார்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் இன்ஜினியராக நடித்திருந்தார். மேலும் நடிகை மனோரம்மாவின் மகன்களாக நடிகர்கள் ராஜ்கிரண், ரஞ்சித் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் நடித்து இருந்தனர். இதில் நடிகை ஷமிதா ஸ்ரீ குமார் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார்.

குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அவர் அவர் வாழ்க்கையில் மற்றும் தோழா தோழா பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டவர் பூமி படத்தின் காட்சிக்காக வருத்தப்பட்ட சேரன்:

இந்த நிலையில் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோபிநாத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சேரன் பாண்டவர் பூமி படத்தில் தான் செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, தனது தங்கை காதல் திருமணம் செய்துக்கொண்டதால் அம்மா மனோரமா இறந்துவிடுகிறார். இதனால் கோபமான அண்ணன் ரஞ்சித் தங்கை ஷமிதாவின் தலையை வெட்டி சீவி விடுவார். இந்த காட்சிக்கு திரையரங்குகளில் உள்ள அனைவரும் எதிர்பாராத விதமாக கைத்தட்டி கொண்டாடினர். அப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரியான ஆணவக் கொலையை ஆதரிக்கும் விதமாக காட்சி வைத்துவிட்டோமோ என்று வருத்தமாக இருந்தது.

மக்களிடையே நல்ல விசயங்களை கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக இப்படி ஒரு காட்சியை வைத்து வன்முறைய தூண்டுகிறோமோ என்று எனக்கு வருத்தமாக இருந்தது. அந்த காட்சியை எடுத்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன் என்றும் இயக்க்குநர் சேரன் அந்த வீடியோவில் பேசி இருப்பார்.

இயக்குநர் டூ நடிகர்:

இயக்குநராக வெற்றிப்பெற்ற நடிகர் சேரன் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நரிவேட்ட என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.