அந்த தமிழ் இயக்குநர்களை பார்த்துதான் படம் பன்னனும்னு ஆசை வந்தது – நடிகர் பேசில் ஜோசஃப்
Actor Basil Joseph: மலையாள சினிமாவில் வாரம் வாரம் ஒரு படத்தை வெளியிட்டு வரும் நடிகர் பேசில் ஜோசஃப். இவர் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மின்னல் முரளி என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் பேசில் ஜோசஃப்
நடிகர் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் பேசில் ஜோசஃப் (Actor Basil Josheph). மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நன்கு பரிச்சையமானவராக இருக்கிறார் பேசில் ஜோசஃப். இவர் நடிகராக பலருக்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும் இவர் இயக்கிய படம் உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நன்கு வரவேற்பைப் பெற்றது. ஆம் இவரது இயக்கத்தில் வெளியான மின்னல் முரளி படம் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இந்தப் படத்தை இயக்கியது பேசில் ஜோசஃபா என்று வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெயஹே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் நடிகர் பேசில் ஜோசஃப். இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் மலையாளப் படங்களுக்கும் தமிழக மக்களிடையே தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் பேசில் ஜோசஃப் தமிழ் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தை திரையரங்கில் பார்த்த போது தான் சீக்கிரமாக படம்பண்ண வேண்டும் என்று நினைத்ததாக தெரிவித்தார்.
மேலும் அந்தப் படம் அப்படி ஒரு மோட்டிவேசனை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சில படங்களை பார்க்கும் போது நாம் சீக்கிரமே படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதில் ஜிகர்தண்டா படம் ஒன்று, சூதுகவ்வும் ஒன்று என்று தெரிவித்தார். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் தனக்கு மிகவும் மோட்டிவேஷனாக இருந்ததாகவும் அந்தப் பேட்டியில் நடிகர் பேசில் ஜோசஃப் தெரிவித்திருந்தார்.
பேசில் ஜோசஃபின் இன்ஸ்டா பதிவு:
தொடர்ந்து பேசிய அவர், இந்த வரிசையில் பண்ணையாரும் பத்மினியும், முண்டாசுப்பட்டி ஆகிய படங்களும் உண்டு. இந்தப் படங்கள் எல்லாம் தன்னுடன் கனெக்ட் ஆவதற்கு காரணமாக அவர் கூறியது இந்தப் படங்களின் இயக்குநர்கள் வயதும் தன்னுடைய வயதும் கிட்டத்தட்டா ஒத்த வயது உடையவர்களாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த மற்ற இரண்டு பிரபலங்கள் குறித்து பேசிய பேசில் ஒன்றி கமல் ஹாசன் மற்றொன்று மணிரத்னம் என்று தெரிவித்தார். சிறு வயதில் இருந்தே இவர்களின் படங்களை பார்த்து வளர்ந்ததால் இவர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.