ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் மோகன்லால்? வைரலாகும் தகவல்

Actor Mohanlal: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் மோகன்லால்? வைரலாகும் தகவல்

இயக்குநர் நெல்சன் உடன் நடிகர் மோகன்லால்

Published: 

08 Jul 2025 17:08 PM

மலையாள சினிமாவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே நடிகர் மோகன்லாலின் (Actor Mohanlal) படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நாயகனாக நடித்து வரும் நடிகர் மோகன்லால் மலையாள சினிமா மட்டும் இன்றி அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். தமிழில் பெரிய அளவில் இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லாம். அதனால் தான் அவர் மலையாளத்தில் நடித்தப் பலப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் தற்போது நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ஷூட்டிங்கள் கலந்துகொண்ட மோகன்லால்?

முன்னதாக எம்புரான் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் மோகன்லால் கலந்துகொண்ட போது ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இன்னும் அவர்கள் கூப்பிடவில்லை, ஜெயிலர் 2 படத்தில் நடிக்க அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் மோகன்லாலை நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது உறிதியானதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தன. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Also read… நோ ஃபேமிலி… நோ ஃப்ரண்ட்ஸ்… கூலி படத்திற்காக இரண்டு வருஷம் கடினமா உழைச்சிருக்கேன் – லோகேஷ் கனகராஜ்

சமீபத்தில் வெளியான தகவலின்படி நடிகர் மோகன்லால் சென்னையில் நடைபெறும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரைத் தவிர, சூரஜ் வெஞ்சாரமூடு, கோட்டயம் நசீர், அன்னா ராஜன் போன்ற மலையாள நடிகர்களும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also read… இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படங்களின் பட்டியளில் முதலிடத்தைப் பிடித்த ராமாயணா