காதல்தோல்வி கதாபாத்திரத்திற்கு என்னை அழைக்கிறீர்கள்? என் முகம் பார்க்க அப்படியா இருக்கு- தனுஷ் கலகல பேச்சு!
Dhanush About Heartbroken Face: பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும், தொடர்ந்து பல்வறு மொழிகளில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் விரைவில் தேரே இஷ்க் மே என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனுஷ்
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் இட்லி கடை (Idli Kadai). கடந்த அக்டோபர் 1ம் தேதியில் வெளியான இப்படம் மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவந்தது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குநரான ஆனந்த் எல். ராய் (Anand L Rai) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் ராஞ்சனா (Ranjanaa) மற்றும் கலாட்டா கல்யாணம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருகிறார். அந்த வகையில், இவரின் கூட்டணியில் தனுஷ் 3வது நடித்துள்ள படம்தான் தேரே இஷ்க் மே. இதில் தனுஷ் விமானப்படை வீரராக நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் இதுபோன்று ராணுவ வீரராக தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவருடன் பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் (Kriti Sanon) நடித்துள்ளார். இந்த படம் வரும் 2025 நவம்பர் 28ம் தேதி முதல் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் தனுஷ் பேசிய வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகபரவி வருகிறது. அந்த வீடியோவில் தனுஷ் தன்னை பற்றிய அனைவரும் சொல்லும் விஷயம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வடசென்னை மற்றும் அரசன் படங்கள் குறித்து ரசிகரின் ஒப்பீடு – வியந்து பேசிய வெற்றிமாறன்
தேரே இஷ்க் மே பட நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய கலகல விஷயம் :
அந்த வீடியோவில் நடிகர் தனுஷ், ” நான் ஆனந்த் எல் ராயிடம் கேட்டேன் “ஏன் என்னை இது போன்ற வேடங்களுக்கு தொடர்ந்து கூப்பிடுறீங்க..?” என்று, அதற்கு அவர், “உங்களுக்கு ஒரு பெரிய காதல் தோல்வி முகம் இருக்கு” என்றார், உண்மையிலே என்னுடைய முகம் பார்ப்பதற்கு அப்படியா இருக்கிறது?. இந்த கேள்வியை நானும் வீட்டில் என்னறையில் இருக்கும் கண்ணாடியில் பார்க்கிறேன். என் முகம் பார்ப்பதற்கு அப்படியா இருக்கிறது என்றும், நானே என்னிடம் கேள்வியை கேட்கிறேன்” என கூறினார்.
இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷின் ஸ்பெஷல் பாடல்… பராசக்தி செகண்ட் சிங்கிள் ப்ரோமோ ரிலீஸ் எப்போது தெரியுமா?
மேலும் பேசிய தனுஷ், ராஞ்சனா படத்திற்கும் தேரே இஷ்க் மே படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ராஞ்சனா படத்தில் என்னை பார்ப்பதற்கு சிம்பிளான கதாபாத்திரம் போலதான் இருக்கும், அதில் நிறைய கஷ்டங்கள் இருக்கும். மேலும் இந்த படத்தில் எப்படி என்று நீங்களே பார்ப்பீர்கள்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் வைரலாக தனுஷ் பேசிய வீடியோ :
#KritiSanon to Dhanush: You have face of heart broken man😂#Dhanush: I looked on the mirror, thinking what’s in my face like that😁
They way kriti feels for Dhanush♥️♥️ pic.twitter.com/TL8CeCDG3H
— AmuthaBharathi (@CinemaWithAB) November 22, 2025
நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மே படம் 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியாகிறது. இன்னும் விரலைவிட்டு என்னும் நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வட மாநிலங்களில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் எதுவும் தொடங்கவில்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.