D55 Movie: தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமியின் டி55 படத்தின் சூப்பர் அப்டேட்!
Dhanush D55 Shooting Update: ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் இணைந்து நடிக்கவுள்ள படம்தான் டி55. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2024ம் ஆண்டில் நடந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ்
கோலிவுட் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் அமரன் (Amaran). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிக்க, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இயக்கியிருந்தார். இவர்கள் இருவருக்கும் பான் இந்திய அளவிற்கு பிரபலம் கொடுத்த படமாகவும் இதுதான் அமைந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷின் (Dhanush) டி55 ( D55) என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் நடைபெற்றிருந்தது.
அப்போது நடிகர் தனுஷ் படங்களை இயக்குவது மற்றும் நடிப்பதில் பிசியாக இருந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக இந்த படமானது எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், அது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: எனது மகன் அந்த நடிகரின் தீவிர ரசிகன்.. பிக்பாஸ் மேடையில் ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!
தனுஷின் டி55 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?
தனுஷின் இந்த டி55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமானது இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் தகவல் பற்றி படக்குழு இன்னும் எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி55 படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#NewProfilePic
On this #MahaShivRatri ,
May Lord Shiva bless us with peace, positivity, prosperity and bliss! #D55
நற்றுணையாவது நமசிவாயவே 🙏 pic.twitter.com/eW6bT6wED2— Rajkumar Periasamy (@Rajkumar_KP) February 26, 2025
தனுஷின் கைவசம் உள்ள படங்கள்
இட்லி கடை படத்தைத் தொடர்நது தனுஷ், இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வரும் 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் மட்டும் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் வரிசைகட்டி நிற்கிறது.
இதையும் படிங்க : பைசன் தான் என் முதல் படம்னு நான் நினைக்கிறேன் – துருவ் விக்ரம் சொன்ன விசயம்!
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி54 படமும், ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 படமும், மாரி செவ்ராஜ் இயக்கத்தில் டி56, வட சென்னை 2, லப்பர் பந்து பட இயக்குநருடன் ஒரு படம் என கிட்டத்தட்ட தமிழில் மட்டும் இவரின் நடிப்பில் படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.