Tere Ishq Mein: எமோஷனல் காதல் கதையில்… ரசிகர்களின் மனதை வென்றதா தனுஷின் தேரே இஷ்க் மே.. விமர்சனங்கள் இதோ!

Tere Ishq Mein Movie X Review: தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியாகியுள்ள 3வது படம்தான் தேரே இஷ்க் மே. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவான இப்படம் இன்று 2025 நவம்பர் 28ம் தேதியோடு உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Tere Ishq Mein: எமோஷனல் காதல் கதையில்... ரசிகர்களின் மனதை வென்றதா தனுஷின் தேரே இஷ்க் மே.. விமர்சனங்கள் இதோ!

தேரே இஷ்க் மே

Published: 

28 Nov 2025 14:19 PM

 IST

பான் இந்திய பிரபல நாயகனாக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியான 3வது திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படமானது இன்று 2025 நவம்பர் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க, கிரித்தி சனோன் (Kriti Sanon) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை அம்பிகாபதி மற்றும் கலாட்டா கல்யாணம் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் அதிரடி ராணுவ விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படமானது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: கோமாளி படத்தின் கதையை இப்படித்தான் எழுதினேன்… – பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்!

தனுஷின் தேரே இஷ்க் மே பட எக்ஸ் விமர்சனங்கள் பதிவு :

இந்த தேரே இஷ்க் மே படத்தின் தொடக்கமானது தனுஷின் நிகழ்கால வாழ்க்கையான விமானப்படை வீரனாக தொடங்குகிறது. இதன் பின் அவரின் கடந்த கால காதல் கதையை வெளிக்காட்டும் வண்ணத்தில் கதை அமைந்துள்ளது.

இதையும் படிங்க: அஞ்சான் ரீ-ரிலீஸ் வெற்றிபெற்றால்.. அஞ்சான் 2 நிச்சயம்- இயக்குநர் லிங்குசாமி பேச்சு!

இதில் தனுஷ் மற்றும் கிரித்தி சனோனின் ஜோடியானது மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது. மேலும் பின்னணி இசையும் அருமையாகவே அமைந்துள்ளது. மெதுவான தொடக்கத்துடன் அமைந்த முதல் பாதியின் இறுதியில் பரபரப்பான இண்டெர்வெல் காட்சிகளுடன் முடிந்துள்ளது.

எமோஷனல் காதல் கதையில் மீண்டும் தனுஷ் :

இந்த தேரே இஷ்க் மே படமானது குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தின் கதையை போலவே அமைந்துள்ளது. காதல், எமோஷனல் மற்றும் காதல் தோல்வி என கலவையான எமோஷனல் காட்சிகளுடன் இந்த் படமானது தயாராகியுள்ளது. இந்த படத்தில் இயக்குநர் ஆனந்த் எல் ராயின் எழுத்து இந்த படத்தின் மெயின் என கூறலாம். மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு சிறப்பாகவே வந்துள்ளது.

தனுஷின் தேரே இஷ்க் மே படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:

தனுஷின் இந்த தேரே இஷ்க் மே படமானது எமோஷனல் காதல் கதையில் உருவாகியுள்ளது. மேலும் அம்பிகாபதி, கலாட்டா கல்யாணம் போன்ற படத்தின் கதையை போலவே இந்த படத்தின் கதையும் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்த படத்திற்கு தமிழ் மக்களிடையே அந்த அளவிற்கு வரவேற்புகள் இல்லை. ஏனென்றால், இந்த படம் வெளியானது கூட பல தமிழ் மக்களுக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை. ஆக மொத்தத்தில் திரையரங்கு சென்று பார்க்கும் அளவிற்கு இந்த படம் அருமையாகவே உள்ளது.

திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!