நீண்ட நாளுக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ் – அனிருத்.. எந்த படத்தில் தெரியுமா?

Dhanush And Anirudh Reunion: தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் படங்ககள் உருவாகிவருகிறது. இந்நிலையில் பல நாட்களுக்கு பின் மீண்டும் அனிருத் இசையில் புதிய படத்தில் இணையவுள்ளாராம். அது பற்றி பார்க்கலாம்.

நீண்ட நாளுக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத்.. எந்த படத்தில் தெரியுமா?

அனிருத் மற்றும் தனுஷ்

Published: 

10 Oct 2025 22:54 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவரின் இசையமைப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் தொடந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தனுஷ் (Dhanush) வரை பல பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அந்த வகையில் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் பல வெற்றி படங்கள் வெளியாகியிருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் சினிமாவில் தனுஷின் 3 படத்தின் மூலம் நுழைந்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் அனிருத் மற்றும் தனுஷின் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் மற்றும் படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த இருவரின் கூட்டணியில் இறுதியாக “திருச்சிற்றம்பலம்” (Thiruchitrambalam) என்ற படத்தில் இணைந்திருந்தனர்.

இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான நிலையில், 3 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த கூட்டணியானது லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) மற்றும் தனுஷின் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் மீண்டும் இணையவுள்ளதாம். அனிருத் மற்றும் தனுஷின் காம்போ, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படத்தில் இணையவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுடன் அடுத்த படம்…. ஷூட்டிங் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

தனுஷ் மற்றும் தமிழரசன் பச்சைமுத்து காம்போ திரைப்படம் :

கடந்த 2024ம் ஆண்டு வெளியான லப்பர் பந்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. இந்த படமானது இவருக்கு சிறப்பான வெற்றியைக் கொடுத்திருந்த நிலையில், இதை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்தின் நடிகர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: கீர்த்தி ஷெட்டியின் தமிழ் அறிமுகம்.. ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்.. என்னென்ன தெரியுமா?

இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில்தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அறிவிப்புகள் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :

நடிகர் தனுஷின் இயக்கத்திலும், நடிப்பிலும் இட்லி கடை என்ற படமானது இறுதியாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக, இவரின் கைவசத்தில் கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. அதில் தமிழில் சுமார் 6-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், டி54 படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.