Raaka: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர்? அட இவர்தான்!

Raaka Movie Cameo Role: தமிழ் இயக்குநர் அட்லீ மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம்தான் ராக்கா. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் கேமியோ வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என விவரமாக பார்க்கலாம்.

Raaka: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர்? அட இவர்தான்!

ராக்கா திரைப்படம்

Updated On: 

18 Apr 2026 19:44 PM

 IST

டோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக படங்களில் நடித்து கலக்கிவருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் இறுதியாக 2024ம் ஆண்டில் புஷ்பா 2 (Pushpa 2) படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக எந்த இயக்குநருடன் அல்லு அர்ஜுன் இணையவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் இயக்குநர் அட்லீ குமார் (Atlee Kumar) இயக்கத்தில் AA22 படத்தில் இணைந்திருந்தார். இந்த படமானது ஆரம்பத்தில் AA22xA06 என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இப்படத்தில் சன் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துவரும் நிலையில், மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுவருகிறது. மேலும் இப்படத்தின் டைட்டில் கடந்த 2026 ஏப்ரல் 8ம் தேதியில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.

ராக்கா (Raaka) என டைட்டில் கொண்ட இந்த படமானது ஹாலிவுட் படத்தின் தரத்தில் தயாராகிவருகிறதாம். அந்த விதத்தில் இதில் பல்வேறு தமிழ் நடிகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் பணியாற்றிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கர படத்தை பார்த்து தனுஷ் சார் சொன்னது – இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!

அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தில் கேமியோ வேடத்தில் நடிக்கும் பாலிவுட் பிரபலம்:

இந்த ராக்கா படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் கிங் பட கதாபாத்திர தோற்றத்தில் இருக்கும் காரணமாக நடிப்பதை தவிர்த்தார்.

இதையும் படிங்க: கர படத்தில் தெலுங்கு டப்பிங் பேசியது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

அந்த விதத்தில் தற்போது அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தில் கேமியோ வேடத்தில் நடிப்பதாக நடிக்க ஒத்துக்கொண்டதாக் கூறப்படுகிறது. இப்படத்தில் மிகவும் முக்கியமான கேமியோ வேடத்தில் இவர் நடிக்கிறாராம். ஷாருக் கான் ஏற்கனவே அட்லீயின் இயக்கத்தில், ஜான்வான் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுனின் ரக்கா படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த ராக்கா படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், இதில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன், யோகி பாபா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கிறார்கள். மேலும் இதற்க்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..