பிக்பாஸ் தமிழ் சீசன் 9 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Bigg Boss Tamil Season 9: சின்னத்திரையில் தமிழக ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்துள்ள நிலையில் அடுத்ததாக 9-வது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தன நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

விஜய் சேதுபதி

Published: 

20 Aug 2025 17:15 PM

வெளி நாடுகளில் பிக் பிரதர் (Bigg Brother) என்று அழைக்கபடும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பல்லேறு மனநிலை உள்ள மனிதர்களை ஒரே வீட்டில் 100 நாட்களுக்கு எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் வைத்து இருந்து அவர்கள் என்ன என்ன செய்கிறார்கள் என்பதை படம் பிடித்து ஒளிபரப்புவார்கள். இது இந்தமாதிரியான கான்செப்ட் தான். நம் சமூகத்தில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப்பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அந்த பழக்கத்திற்கு தீணி போடுவது போன்ற நிகழ்ச்சிதான் இது. இது வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவில் முதன் முறையாக இந்தி திரையுலகில் பிக்பாஸ் (Bigg Boss) என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினர். இது இந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்தந்த மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட்டது. அதன்படி தமிழில் நடிகர் கமல் ஹாசன், தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் 7 சீசன்களாக தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் ஹாசன் 8 சீசனில் விலகுவதாக அறிவித்தார். அது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்றதும் அவர்கள் அனைவரும் ஆசுவாசம் அடைந்தனர்.

அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9:

கடந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கிய நிலையில் 9-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குவதாக இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி பிக்பாஸ் சீசன் 9 வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

மேலும் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக பிரபலங்கள் பலர் முயற்சி செய்து வருவதாகவும் அவர்களின் பட்டியல் இனிவரும் நாட்களில் தெரியவரும். அதன்படி அக்டோபரில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி ஜனவரி 2026-ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… கூலி படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு… இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்து பேசிய நடிகை ரச்சிதா ராம்!

இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் பதிவு:

Also Read… Fahadh Faasil : டாம் குரூஸுடன் ஹாலிவுட் பட வாய்ப்பு.. நடிக்க மறுத்த ஃபகத் பாசில் – என்ன காரணம்?