மலையாள சினிமாவில் 2025-ல் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படங்கள்!
Best Malayalam Movies: கோலிவுட் சினிமாவைப் போல மோலிவுட் சினிமாவில் 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பலப் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் மலையாள சினிமாவில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படங்களின் பட்டியளை தற்போது பார்க்கலாம்.

படங்கள்
ரேகசித்திரம்: நடிகர் அசிஃப் அலி (Actor Asif Ali) நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரேகசித்திரம். மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஜோஃபின் டி. சாக்கோ இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஆசிஃப் அலி உடன் இணைந்து நடிகர்கள் அனஸ்வர ராஜன், மனோஜ் கே.ஜெயன், சித்திக், ஜெகதீஷ், சாய்குமார், ஹரிஸ்ரீ அசோகன், இந்திரன்ஸ் ஆகியோர் நடித்து இருந்தனர். iந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் முஜீப் மஜீத் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் மலையாளத்தில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இந்த ரேகசித்திரம் படத்தை வெகுவாகப் பாராட்டினர். படம் ஓடிடியில் வெளியான பிறகு மேலும் நல்லா வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ரேகசித்திரம் படத்தின் ட்ரெய்லர்:
L2: எம்புரான்: மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் L2: எம்புரான். இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி இருந்தார். 2019-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக இந்த L2: எம்புரான் வெளியானது.
இதில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் டொவினோ தாமஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுராஜ் வெம்முடு, மஞ்சு வாரியர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இது மலையாளத்தில் உருவாகி இருந்தாலும் தென்னிந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Also read… Thalaivan Thalaivii : தலைவன் தலைவி படப் ‘பொட்டல முட்டையே’ பாடல் BTS வீடியோ
L2 எம்புரான் படத்தின் ட்ரெய்லர்:
நரிவேட்ட: நடிகர் டொவினோ தாமஸ் நடித்து கடந்த மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நரிவேட்ட. இயக்குநர் அனுராஜ் மனோகர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். அபின் ஜோசஃப் என்பவர் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமுடு, ஆர்யா சலிம், பிரணவ் தியோபின், பிரியம்வதா கிருஷ்ணன் மற்றும் சேரன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
மலைவாழ் மக்களை அவர்கள் பகுதியில் இருந்து விரட்ட அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக அந்த மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகியுள்ளது.
Also read… மங்காத்தா படத்திற்கு 2 கதை… இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன உண்மை!