இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தற்போது இவரும் நடிகர்தான்.. அட யாருனு தெரியலையா!

Tamil Actor Childhood Photo: தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகர்கள் இருந்துவருகின்றனர். அவர்களின் வரிசையில் பல இளம் நடிகர்களும் சினிமாவில் வளர்ந்துவருகின்றனர். இந்நிலையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கம். அதுபோல் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என விவரமாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தற்போது இவரும் நடிகர்தான்.. அட யாருனு தெரியலையா!

பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம்

Published: 

21 Dec 2025 22:58 PM

 IST

இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவை ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் (Tamil Cinema) இளம் நடிகர்கள் அதிகம். அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகிவருவது வழக்கமே. அதுபோன்று மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா?. அவரின் கையில் இருக்கும் குழந்தையும் தற்போது நடிகர்தான். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவரின் தந்தை 90ஸ் காலகட்டத்தில் வெளியான படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இவரும் தனது தந்தையை பின் தொடரும் விதத்தில் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் திரைப்படத்தில் நடிகை சமந்தாவிற்கு (Samantha) ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதை தொடர்ந்து சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். இப்போதாவது இந்த சிறுவன் யார் என தெரிகிறதா? இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் 2025ல் ஒரு ஹிட் படமும் கொடுத்துள்ளார். அட இன்னுமா? இந்த நடிகர் யார் என தெரியவில்லை. இது வேறுயாருமில்லை நடிகர் அதர்வாதான் (Atharvaa).

இதையும் படிங்க: அரசியல் நிகழ்ச்சியல்ல தளபதி திருவிழா இசைவெளியீட்டு விழா.. அதிரடி எச்சரிக்கை கொடுத்த மலேசிய போலீஸ்!

நடிகர் அதர்வா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

அதர்வாவின் தமிழ் சினிமா நுழைவு :

நடிகர் அதர்வா கடந்த 1989ம் ஆண்டில் சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை பழம்பெரும் நடிகர் முரளி ஆவார். இவரை ரசிகர்கள் இதயம் முரளி என்றும் அழைப்பார்கள். தனது தந்தையின் முரளியின் இறப்பிற்கு பின்னே இவரது முதல் படம் வெளியாகியிருந்தது.  அப்படி இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்திருந்தது பானா காத்தாடி. கடந்த 2010ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்ந்தது. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்திருந்தார். இவருக்கும் ஹீரோயினாக இதுதான் அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிம்பு படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சூப்பர் அப்டேட்!

இந்த படத்தை தொடர்ந்த அதர்வாவிற்கு தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதில் இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம் பரதேசி. இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். மேலும் இவருக்கு ஈட்டி, பூமராங், ஜெமினி கணேசனும் சுருளி ராஜான்னும், டிஎன்ஏ போன்ற படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. மேலும் இவர் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவரின் கைவசத்தில் இதயம் முரளி, வலை, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை