AR Murugadoss : தளபதி விஜய்யின் படத்தைப்போல சிவகார்த்திகேயன் படத்திலும்.. ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்த விஷயம்!
Madharaasi Movie Update : தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கத்தில் மதராஸி படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில், அவர் மதராஸி டிரெய்லர் நிகழ்ச்சியில் ஏ.ஆர். முருகதாஸ் பேசியபோது, மதராஸி படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஏஆர் முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கத்தில் அஜித் குமார் முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இவர் சினிமாவில் முதன் முறையாக அறிமுகமான திரைப்படம் தல அஜித் குமாரின் தீனா (Dheena). அதை தொடர்ந்து விஜயகாந்த்துடன் இணைந்து ரமணா படத்தில் பணியாற்றினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து கத்தி, துப்பாக்கி மற்றும் சர்கார் போன்ற படங்களையும், சூர்யாவை (Suriya) வைத்து 7ஆம் அறிவு , கஜினி போன்ற திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் சல்மான்கான் முதல் ஆமிர் கான் படங்களையும் இயக்கியிருக்கிறார்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) இவர் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் மதராஸி (Madharaasi). இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மாற்று இசை வெளியீட்டு விழா நேற்று 2025, ஆகஸ்ட் 24 ஆம் தேதியில் நடை பெற்றிருந்தது. அதில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், “மதராஸி படத்தில் சிறிய கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : SK- வின் பண்ணா.. நான் வின் பண்ண மாறி.. எமோஷனலாக பேசிய அனிருத்!
மதராஸியில் கேமியோ ரோலில் ஏ.ஆர்.முருகதாஸ்
அந்த நிகழ்ச்சியில் மதராஸி படத்தை பற்றியும், தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் குறித்து பல்வேறு விஷயங்களை முருகதாஸ் பகிர்ந்திருந்தார். மேலும் பேசிய அவர், “தளபதி விஜய் சாருடன் நான் பணியாற்றிய 3 படங்களிலும், ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன். அது போல சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும், ஒரு ஸ்பெஷல் ரோலில் நடித்திருக்கிறேன்” என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : குட்டி தளபதி.. திடீர் தளபதினு சொல்லுறாங்க.. – தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
மதராஸி படக்குழு வெளியிட்ட பதிவு :
M for Madharaasi.
M for Murugadoss.
M for Madness.Our director @ARMurugadoss about to set the screens on fire, on Sep 5th 🔥#MadharaasiTrailer out now : https://t.co/Oe6jr6pkR4#MadharaasiFromSep5 pic.twitter.com/aFu16q3oFy
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 24, 2025
சிவகார்த்திகேயனின் மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று 2025, ஆகஸ்ட் 24ம் தேதியில் வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் இந்த ட்ரெய்லர் இருந்தது என்றே கூறலாம். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.