Vishal35 : மீண்டும் இணைந்த மத கஜ ராஜா கூட்டணி.. ‘விஷால்35’ படத்தில் அஞ்சலி!

Anjali joins Vishal35 Movie : இயக்குநர் ரவி அரசு இயக்கும் விஷால் 35 படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகை துஷாரா விஜயன் நடித்துவரும் நிலையில், தற்போது நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal35 : மீண்டும் இணைந்த மத கஜ ராஜா கூட்டணி.. விஷால்35 படத்தில் அஞ்சலி!

விஷாலின் 35வது திரைப்படம்

Published: 

23 Aug 2025 15:39 PM

 IST

நடிகர் விஷால் (Vishal) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 34 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இவர் தமிழில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” (Chellame) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமான இவர், தொடர்ந்து தமிழில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja). இப்படமானது கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகவேண்டியது. பின் சுமார் 12 வருடங்களுக்குப் பின் இந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியானது. இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருந்தது.

இப்படத்தை அடுத்ததாக தற்போது, இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்கத்திலும், சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films) நிறுவனத்தின் தயாரிப்பிலும் விஷால்35 (Vishal35)  என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் இணைந்துள்ளார். இதில் நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், தற்போது நடிகை அஞ்சலியும் (Anjali) இப்படத்தில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மத கஜ ராஜா படத்திலும் இணைந்து நடித்திருந்த நிலையில், மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு ரிலீஸாகும் 2 படங்கள்.. கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதன்!

விஷால்35 படத்தில் அஞ்சலி இணைந்தது குறித்து விஷால் வெளியிட்ட பதிவு :

இந்த படத்தில் நடிகை அஞ்சலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷால்35 படத்தின் பூஜை கடந்த 2025, ஜூலை மாதத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கியிருந்தது.

இதையும் படிங்க : விஜய்யுடன் ஒரு படம்.. மிஸ்ஸான வாய்ப்பு – இயக்குநர் AR முருகதாஸ்!

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருடன் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார். மத கஜ ராஜா படத்தை அடுத்ததாக விஷால் மற்றும் அஞ்சலி இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்35 பட ரிலீஸ் எப்போது?

விஷாலின் 25வது படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் நடிகர் ஜீவா தயாரித்தது வருகிறார். இப்படமானது இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகும் 99வது படமாகும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இவர் இறுதியாக விஷாலின் நான் சிகப்பு மனிதன் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து 2வது முறையாக, விஷால்35 படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் ரிலீஸ் செய்வதற்குத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Related Stories
நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்
Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!
அருண் விஜய்யின் ரெட்ட தல படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஓபன் டாக்!
வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!
மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!