இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் – வைரலாகும் போஸ்ட்

Varalaxmi Sarathkumar : தமிழ் சினிமாவில் நடிகையாம அறிமுகம் ஆகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் தற்போது புது அவதாரத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் - வைரலாகும் போஸ்ட்

நடிகை வரலட்சுமி சரத்குமார்

Published: 

27 Sep 2025 18:16 PM

 IST

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் தான் சரத்குமார். இவரது முதல் திருமணத்தில் பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மூத்த மகளாக சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தற்போது தனக்கான இடத்தை மிகவும் பலமாக பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். மேலும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடித்து இருந்தார். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி இவரது நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுனன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி, இரவின் நிழல், பொய்கால் குதிரை, காட்டேரி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடித்தால் நாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லி, குணச்சித்திரம் என தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகையாக சினிமாவில் வலம் வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்.

இயக்குநராக அறிமுகம் ஆகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்:

அதன்படி நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ஒரு இயக்குநராக எனது பயணத்தைத் தொடங்குவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.. என் சகோதரி பூஜாவுடன் இணைந்து தயாரிப்பது ஒரு பெரிய போனஸ்.. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக எனது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நன்றி.. உங்களை ஏமாற்றாமல் இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் தேவை..
சரஸ்வதி பயணத்தைத் தொடங்குகிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read… லோகா சாப்டர் 2 குறித்த அறிவிப்பை வெளியிட்ட துல்கர் சல்மான்

நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… நானியின் பாரடைஸ் படத்தில் இணைந்த நடிகர் மோகன் பாபு