ஒரே கனவின் விதைகளை இரண்டு வெவ்வேறு மண்ணில் விதைத்தோம் – வைரலாகும் சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

Dance Master Sandy: தமிழக அரசின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமாவில் சாதித்தவர்களுக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது. இது தொடர்பாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஒரே கனவின் விதைகளை இரண்டு வெவ்வேறு மண்ணில் விதைத்தோம் - வைரலாகும் சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

சாண்டி மற்றும் மணிகண்டன்

Published: 

13 Oct 2025 20:35 PM

 IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் சாதனை செய்தவர்களை கவுரவிக்கும் விதமாக கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறப்பாக பங்காற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் திரைத்துறையை சார்ந்த பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வென்ற பிரபலங்களுக்கு விருதை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் மணிகண்டன் (Actor Manikandan) மற்றும் விக்ரம் பிரபு, எஸ்.ஜே. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர்கள் என பலருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விருதுகளை வென்ற பிரபலங்கள் பலர் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தெரிவித்து வந்தனர்.

அதன்படி நடிகர் மணிகண்டன் மற்றும் நடன இயக்குநர் சாண்டி இருவரும் இந்த விருதுகளை ஒரே நேரத்தில் வென்றுள்ளது. இது தொடர்பாக நடன இயக்குநர் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவில் நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகர் மணிகண்டன் இருவரும் சினிமாவில் சின்ன இடத்தில் இருந்து தற்போது உள்ள நிலைக்கு எப்படி உயர்ந்தார்கள் என்பது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

எங்கள் பயணங்கள் வேறுபட்டவை, ஆனால் இலக்கு ஒன்றுதான்:

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் நடன இயக்குநர் சாண்டி கூறியுள்ளதாவது, ஒரே கனவின் விதைகளை இரண்டு வெவ்வேறு மண்ணில் விதைத்தோம். நாங்கள் ஒரே மட்டத்திலிருந்து தொடங்கினோம், ஆனால் வெவ்வேறு பாதைகளில் நடந்தோம். எங்கள் கனவில் வேரூன்றி நீண்ட தூரம் வந்துவிட்டோம். இன்று நாம் இந்த மேடையில் ஒன்றாக நிற்கிறோம்… கலைமாமணி விருதைப் பகிர்ந்து கொள்ளும் வெற்றியின் வெளிச்சத்தில் எங்கள் பயணங்கள் வேறுபட்டவை, ஆனால் இலக்கு ஒன்றுதான். காலம் நமக்கு நினைவூட்டுகிறது … நட்பு தூரத்திலோ அல்லது போராட்டங்களிலோ மங்காது என்று அந்தப் பதிவில் சாண்டி தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்த ஆயிஷா… வைரலாகும் வீடியோ

நடன இயக்குநர் சாண்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… ரஜினிகாந்த், தனுஷ் வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் –  நாகர்ஜுனா சொன்ன விசயம்