Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trisha Krishnan: வயசானாலும் அழகு குறையவே இல்ல.. ஜொலிக்கும் த்ரிஷா!

Trisha Krishnan Viral Photos : குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இன்று இந்த திரைப்படமானது வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Trisha Krishnan: வயசானாலும் அழகு குறையவே இல்ல.. ஜொலிக்கும் த்ரிஷா!
த்ரிஷா கிருஷ்ணன்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 13 Jun 2025 09:35 AM

தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) . இவரின் முன்னணி இயக்கத்தில் தற்போது ரிலீஸாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar)  முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்கள் ஜோடி காமினேஷன் இந்த படத்திலும் அருமையாக அமைந்துள்ளது. இந்த படத்தைப் பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியுள்ளார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. நடிகை த்ரிஷா இறுதியாக நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்தார். இந்த படத்தில் இவர் அஜித் குமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படமானது முற்றிலும் வின்டேஜ் கதைக்களத்துடன் மாறுபட்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகை த்ரிஷாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல், ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி த்ரில்லர் கலந்த குட் பேட் அக்லி படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். தபோது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தின் கண்ட ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தைக் கலக்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் குட் பேட் அக்லி புகைப்படங்கள் :

தென்னிந்தியாவில் நடிகை நயன்தாராவைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ.4 முதல் ரூ.10 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இவர் தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு எனத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இவர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் தக் லைப், சூர்யா 45 படத்திலும் மலையாளத்தில் விஸ்வம்பரா மற்றும் ராம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ராம் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்தது. மேலும் இவர் தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்ற படத்தில் ஆக்ஷ்ன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்திலிருந்து வருகிறது.

மேலும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் சூர்யா45 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் சூர்யாவுடன் 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டு 3 படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் 2 படங்கள் ரிலீசிற்கு தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.