Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுகவின் ‘ஒரே அணியில் தமிழ்நாடு’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

One Nation, One Voice: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்த 45 நாள் இயக்கம், திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மத்திய அரசுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திமுகவின் ‘ஒரே அணியில் தமிழ்நாடு’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Jul 2025 13:25 PM

சென்னை ஜூலை 01: சென்னை (Chennai)  அண்ணா அறிவாலயத்தில் (Anna Arivalaiyam), திமுக உறுப்பினர் சேர்க்கையை தூண்டுவதாக அமைந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2025 ஜூலை 1 இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் கூறியதாவது: “திமுக சார்பில் மகத்தான ஒரு முயற்சியாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். இன்று முதல் அடுத்த 45 நாட்கள் வரை இந்த இயக்கம் மாநிலமெங்கும் தீவிரமாக நடைபெறும். நாளை இதே தலைப்பில் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 2025 ஜூலை 3 முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களை இயக்கத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என முதலமைச்சர் தெரிவித்தார்.

ஒரே அணியில் தமிழ்நாடு இயக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான “ஒரே அணியில் தமிழ்நாடு” என்ற மகத்தான இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025 ஜூலை 1-ஆம் தேதி இன்று தொடங்கி வைத்தார். இந்த இயக்கம், மத்திய பாஜக அரசால் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதையும், மாநில உரிமைகளுக்காக மக்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

“ஒரே அணியில் தமிழ்நாடு” – இயக்கத்தின் நோக்கமும் செயல் திட்டமும்

“தமிழ்நாட்டின் முக்கியமான நாளாக இந்த நாள் இருக்கும். ‘ஒரே அணியில் தமிழ்நாடு’ என்ற மகத்தான திட்டம் இன்று நான் தொடங்கி வைக்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த இயக்கம், அடுத்த 45 நாட்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

பொதுக்கூட்டங்கள்: 2025 ஜூலை 2 ஆம் தேதி, அதாவது நாளை, ‘ஒரே அணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

வீடு வீடாக மக்கள் சந்திப்பு: 2025 ஜூலை 3 ஆம் தேதி முதல், திமுகவினர் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்க உள்ளனர்.

மாவட்டப் பொறுப்பு: இந்தச் செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் அவரவர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்து இயக்கத்தின் நோக்கங்களையும், செயல்பாடுகளையும் விளக்குவார்கள்.

தொழில்நுட்பப் பயிற்சி: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த இயக்கத்தின் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்வார்கள்.

அனைவரும் ஒரே குடும்பமாக இணைவோம்-முதலமைச்சர்

மத்திய அரசு மீதான விமர்சனங்களும் மக்கள் ஒன்றிணைவதற்கான அழைப்பும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் மக்கள் உரிமைக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மத்திய பாஜக அரசால் தமிழும் தமிழ்நாடும் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகின்றன என்பதை தான் சொல்ல வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

புறக்கணிப்பு குற்றச்சாட்டு: “அரசியல், மொழி, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் நமக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருகிறது” என்று முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

நிதி ஒதுக்கீடு: எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு என்று சிறப்புத் திட்டம் கிடையாது என்றும், பள்ளிக்கல்விக்கான நிதியும் மறுக்கப்படுகிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த இயக்கத்தின் மூலம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி அனைத்து மக்களையும் சந்திக்க உள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் தற்போது மக்களைச் சந்திக்க உள்ள நிலையில், தாங்கள் தொடர்ந்து மக்களைச் சந்தித்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த முன்னெடுப்பு, மத்திய அரசுக்கு எதிரான மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.