அஜித்தின் கடந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து சொன்ன ஷாலினி
Actress Shalini Instagram Post: மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் அஜித் குமாரின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கடந்த ஆண்டு பிறந்தநாளின் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி பகிர்ந்துள்ளார். நேற்று காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பத்ம பூஷன் விருதைப் பெற்ற பிறகு சென்னை வந்த நடிகர் அஜித் குமாரை (Ajith Kumar) சூழந்தனர் அவரது ரசிகர்கள். அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் குமார் காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் அஜித் குமார் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பிறகு நடிகர் அஜித் இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று நடிகர் அஜித் குமார் தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளிற்கு குடும்பத்தினர், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமார் (Shalini) அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர் அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
முன்னணி நடிகரும் 2025 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்றவருமான அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமார், அஜித்தின் 53-வது பிறந்தநாளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவு, ஏனென்றால் சிறந்த நாட்கள் என்றென்றும் நினைவில் கொள்ளத் தகுதியானவை என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஷாலினி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
அஜித் குமாருக்கு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று டெல்லியில் பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அந்த விழாவைத் தொடர்ந்து சென்னைக்குத் திரும்பும் போது, விமான நிலையத்தில் ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்தனர். காரை நோக்கிச் அஜித் குமார் செல்லும் வழியில், அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அஜித் குமாரின் கார் ரேஸ் குழு வெளியிட்ட பதிவு:
View this post on Instagram
ஏப்ரல் 28 அன்று டெல்லியில் நடிகர் அஜித் குமாருக்கு விருது வழங்கப்பட்டது குறித்த பதிவை அவரது குழு தங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டது. மிகுந்த பெருமையுடன், வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ், ஆஸ்பயர் வேர்ல்ட் டூர்ஸ் மற்றும் அஜித் குமார் ரேசிங்கின் முழு குழுவினரும் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அஜித் குமாருக்கு மதிப்புமிக்க பத்ம விருதைப் பெற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தருணத்தை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நீங்கள் இன்னும் பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளனர்.