Samantha: மேடையில் கண் கலங்கிய உதவியாளர்.. சமந்தா செய்த விஷயம்!
Samantha Consoles Her Tearful Assistant : தமிழ் சினிமாவை தொடர்ந்து பான் இந்திய முழுவதும் பிரபலமான நாயகியாக இருந்து வருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து தயாரித்தும் வருகிறார். இவரின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான சுபம் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் கண்கலங்கிய உதவியாளரை சமந்தா சமாதானம் செய்த வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் (Samantha Ruth Prabhu) நடிப்பில் கடந்த 2 வருட காலமாகப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் நடிகை சமந்தாவிற்கு ஏற்றவாறு கதைகளும் அமையவில்லை என்றும் கூறப்படுகிறது. இவரின் நடிப்பில் இறுதியாகக் குஷி (kushi) படமானது வெளியானது. இந்த படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு, விஜய் தேவரகொண்டாவிற்கு (Vijay Deverakonda) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து நடிகை சமந்தா எந்த படங்களிலும் நடிக்கவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை தவிர்த்துள்ளார். மேலும் படங்களை நடிப்பதை கடந்து, தயாரிப்பதில் இறங்கியுள்ளார்.
இவரின் தயாரிப்பில் முதலில் வெளியாகியுள்ள படம் சுபம் (shubham ). தெலுங்கில் புதுமுக நடிகர்களைக் கொண்டு இந்த படம் வெளியாகியிருந்தது. இந்த இடமானது கடந்த 2025, மே 9ம் தேதியில் தெலுங்கு மொழியில் வெளியாகியிருந்தது. தற்போது இப்படமானது திரையரங்குகளை நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவின் உதவியாளர் மேடையில் கண்கலங்கியுள்ளார். இதற்கு நடிகை சமந்தா செய்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. நடிகை சமந்தா அந்த உதவியாளரை மேடையில் கட்டியணைத்து ஆறுதல் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் வீடியோ :
Entha love unte ❤️ oka team member ki edupu ostadi 🙌 @Samanthaprabhu2 HEARTFUL MOMENT WITH HER TEAM 🥹❤️🔥👏#shubham #SamanthaRuthPrabhu#Samantha pic.twitter.com/UE58hUBJ4c
— Telugu Cult 𝐘𝐓 (@Telugu_Cult) May 16, 2025
சுபம் வெற்றிவிழா சந்திப்பில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சமந்தாவின் உதவியாளர் ஆர்யன் என்பவர் மேடையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கேற்று மேடையிலேயே கண்ணீர் விட்டார். இதைப் பார்த்த சமந்தா உடனடியாக அவரிடம் சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் சமந்தாவின் இந்த செயலானது பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவைப் பாராட்டி வருகின்றனர், மேலும் சமந்தா ஒரு அழகான உள்ளம் கொண்டவர் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் சமீப காலமாக சமந்தாவைப் பற்றி டேட்டிங் வதந்திகள் பரவி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் அவர் புகைப்படங்களைப் பகிர்ந்த பிறகு மீண்டும் விவாதம் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு ராஜ் நிதிமோருவின் மனைவியும் பதிலளித்தார். இருப்பினும், இவை வெறும் வதந்திகள் என்று நடிகை சமந்தாவின் மேலாளர் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.