Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : பருத்திவீரன் படத்தில் அந்த சீன் எடுக்கும்போது நானும் கார்த்தியும் பட்டினியா கிடந்தோம்.. நடிகை பிரியாமணி பகிர்ந்த விஷயம்!

Actress Priyamani : 2000ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் பிரியாமணி. தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தமிழிலும் முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் கார்த்தியுடன் பருத்திவீரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து முன்னதாக ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

Cinema Rewind : பருத்திவீரன் படத்தில் அந்த சீன் எடுக்கும்போது நானும் கார்த்தியும் பட்டினியா கிடந்தோம்.. நடிகை பிரியாமணி பகிர்ந்த விஷயம்!
நடிகை பிரியாமணிImage Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 04 May 2025 22:37 PM

தெலுங்கு சினிமாவின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகை பிரியாமணி (Priyamani). கடந்த 2003ம் டோலிவுட்டில் வெளியான எவரே அடகாடு (Evare Athagadu) என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அப்போது பிரபலமாக இருந்த நடிகர் வல்லப் உடன் நடித்து மிகவும் பிரபலமானார். இவரின் முதல் படம் இவருக்கு ஓரளவு வரவேற்பைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கன்னடத்தில் ராம், மலையாளத்தில் புதிய முகம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து பிரபலமானார். இவருக்குத் தமிழில் அறிமுக படமாக அமைந்தது கடந்த 2004ம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் (Kangalal Kaidhu Sei) . இந்த படமானது அவருக்கு அந்த அளவிற்குப் பிரபலத்தைக் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் அது ஒரு கனா காலம் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இவருக்கு ஓரளவு பிரபலத்தை கொடுத்து.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்குச் சிறப்பான வரவேற்பைக் கொடுத்து இன்றுவரை மறக்கமுடியாத படமாக அமைந்தது பருத்திவீரன். கடந்த 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார். அவரின் இயக்கத்தில் இந்த படமானது அருமையாக அமைந்திருந்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தது தமிழ் மக்களிடையே மிகவும் பேமஸ் ஆனார்.

அதுவும் இந்த படத்தில் நடிகை பிரியாமணி கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெறும் வரவேற்பை பெற்ற முதல் படமாகவும் இது கருதப்படுகிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை பிரியாமணி பேசியுள்ளார். அதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் நடித்ததை பற்றி நடிகை பிரியாமணி கூறிய விஷயம் :

முன்னதாக பேசிய நேர்காணலில் நடிகை பிரியாமணி “பருத்திவீரன் படத்தில் நான் அடிவாங்கிய விஷயமும் சரி, நான் சேற்றில் கீழ விழும் காட்சிகளும் சரி அத்தனையும் நிஜமாக நடந்தது. அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் பயங்கரமாக இருக்கும். அதிலும் கார்த்தி அடிக்கும்போது நான் சேற்றில் விழும் காட்சியானது மதுரையில், மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் எடுக்கப்பட்டது. அந்த காட்சியை எடுப்பதற்கு முன் இயக்குநர் அமீர் சில நாட்களுக்கு முன் ஒரு குழியைத் தோண்டி அதில் உதவியாளர்களை தண்ணீரை நிரப்பி வைக்கச் சொன்னார்.

நானும் அதை எதிர்பார்க்கவில்லை. அந்த சேறானது பல நாட்களாக ஊறி இருந்தது. அதிலும் கார்த்தி என்னை அடித்து நான் அந்த சேற்றில் விழும் காட்சி ஒரு முறையோடு முடியவில்லை. பல ரீ டேக் சென்றது. அந்த சேற்றிலே நான் விழுந்து விழுந்து பழகியேவிட்டேன். எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் என்றாலே நான் பருத்திவீரன் படத்தைத்தான் சொல்லுவேன்” என்று நடிகை பிரியாமணி அந்த வீடியோவில் பேசியிருந்தார் .

 

பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!
பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!...
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!...
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?...
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!...
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!...
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி...
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?...
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!...
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!...
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!...