Pooja Hegde : ‘வின்டேஜ் லுக்கில்’ ரெட்ரோ நாயகி.. ரசிகர்களைக் கவரும் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
Pooja Hegdes Vintage Look : நடிகை பூஜா ஹெக்டேவின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விண்டேஜ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதாப்பாத்திரம் போல நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழில் இயக்குநர் மிஷ்கினின் (Myshkin) முகமூடி (Mugamoodi) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே (Pooja Hegde). இந்த படத்தின் மூலமாகத்தான் அவர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் வெளியான இந்த படமானது பெரும் தோல்வியைத் தழுவியது என்றே கூறலாம், அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களின் (Telugu films) மீது கவனம் செலுத்தி வந்தார். தமிழில் இவருக்கு அந்த அளவிற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை என்றாலும், இவர் தெலுங்கில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றார். டோலிவுட் சினிமாவில் நடிகர்கள் அல்லு அர்ஜுன் (Allu Arjun) முதல் பிரபாஸ் (Prabhas) வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். அதை தொடர்ந்து இவருக்கு தமிழில் ரீ- எண்ட்ரியாக அமைந்த படம் பீஸ்ட் (Beast).
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் தமிழில் மீண்டும் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய்யுடன் அரபிக் குத்து என்ற பாடலுக்குத் தனது நடனத்தினால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து இவருக்குத் தமிழிலும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான் சூர்யாவின் ரெட்ரோ பாதத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் ருக்மினி என்ற ரோலில் நடித்துள்ளார். சூர்யாவுடன் இந்த படத்தில் வின்டேஜ் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படமானது 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து ரெட்ரோ லுக்கில் நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் அவர் ஒரு பதிவில் சுமார் 70 வருடப் பழமையான புடவையை உடுத்தியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் நடிகர் தளபதி விஜய்யுடன் மீண்டும் நடித்து வருகிறார். ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த வருகிறார். இயக்குநர் ஹெச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படமானது இறுதிக்கட்ட பணியில் இருந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் முழுமையாக அரசியலில் இறங்கவுள்ள நிலையில், ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 2025 மே மாதத்தின் 2வது வாரத்தில் முழுமையாக நிறைவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே மேலும் இந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2025, மார்ச் மாதத்தில் தொடங்கியது. இதில் ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரெட்ரோ , ஜன நாயகன் போன்ற படங்களைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் படத்திலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. காஞ்சனா திரைப்படத்தின் தொகுப்பில் உருவாக்கவுள்ள, காஞ்சனா 4 படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.