தனது முன்னாள் காதலர்கள் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பார்வதி!
Actress Parvathy About Ex - Boyfriends: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக தங்கலான் என்ற படத்தில் நடித்தார் நடிகை பார்வதி திருவோத்து. இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரமிற்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிகை பார்வதி திருவோத்து நடித்திருந்ததைத் தொடர்ந்து ரசிகர்களிடம் இருந்து அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

மலையாளத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான அவுட் ஆஃப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பார்வதி திருவோத்து (Parvathy Thiruvothu). கடந்த 2008-ம் ஆண்டு தமிழில் வெளியான பூ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனது அப்பவி தனமான நடிப்பால் ரசிகர்களிடம் கவனம் பெற்றார் நடிகை பார்வதி. அதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு தமிழில் தனுஷுடன் இணைந்து மரியான் (Mariyan) படத்தில் நடித்துள்ளார். பூ படத்தில் பார்வதியா இது என்பது போல ரசிகர்களை சொக்க வைத்தார் நடிகை பார்வதி. இந்தப் படம் வெளியான் போது பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்றாலும் பார்வதி கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் பார்வதி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வந்தார் நடிகை பார்வதி திருவோத்து. மலையாளத்தில் பேங்களூர் டேஸ், என்னுல் நிண்ட மொய்தீன், சார்லி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது பார்வதி நடிப்பில். தமிழில் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான தங்கலான் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் வெற்றி பெற்ற போதிலும், குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே தன்னால் பணியாற்ற முடிந்ததாக முன்னதாக நடிகை பார்வதி அளித்த பேட்டியில் பேசியிருந்தார். அதில் பார்வதியின் பேசியதாவது, சில நடிகர்களுடன் தான் ஒருபோதும் நடிக்கவில்லை. மேலும் அவர்கள் தன்ன்னுடன் நடிக்க ஆர்வம் காட்டாததால், தனக்கும் அவர்களுடன் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தான் தனது சொந்த விருப்பப்படி நடிப்பதில் இருந்து விலக முடிவு செய்யும் வரை நடிப்பைத் தொடர வேண்டும் என்ற தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். தான் சந்தித்த பின்னடைவுகள், வேலை தேடுவதில் தன்னை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்துள்ளன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
‘டேக் ஆஃப்’, ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘உயரே’ மற்றும் ‘சார்லி’ போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்ற போதிலும், அதன் பிறகு ஒரு சில மலையாளப் படங்களில் மட்டுமே அவரால் நடிக்க முடிந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் நடிகை பார்வதி சமீபத்தில் தனது முன்னாள் காதலர்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, என்னுடைய முன்னாள் காதலர்களில் பெரும்பாலானவர்களுடன் நான் தொடர்ந்து நட்புடன் இருக்கிறேன். அவர்களில் பலருடன் நான் இன்னும் பேசுகிறேன். மேலும் முன்னாள் காதலர்களுடன் தனக்கு நெருங்கிய உறவு இல்லை என்றும், ஆனால் எப்போதாவது நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு நலன் விசாரித்துக்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.