Cinema Rewind : அந்த படத்தில் நடிக்கும்போது அருவருப்பாக இருந்தது… நடிகை மீனா பகிர்ந்த தகவல்!

Meena About Naattamai Movie Experience : தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் மிகவும் ட்ரெண்டிங்கான நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர்தான் மீனா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் ஒரு படத்தில் நடிக்கும்போது அருவருப்பாக இருந்ததாக கூறியுள்ளார். அது எந்த படம் என்ன என்பதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : அந்த படத்தில் நடிக்கும்போது அருவருப்பாக இருந்தது... நடிகை மீனா பகிர்ந்த தகவல்!

நடிகை மீனா

Published: 

21 May 2025 19:44 PM

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையில் நுழைந்தவர் நடிகை மீனா (Meena). இவர் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan), ரஜினி (Rajinikanth) போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் ஒரு புதிய கதை (Puthiya Kadhai) என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார். கதாநாயகியாக இவருக்குத் தமிழில் பிரபலம் கொடுத்த படம் எஜமான் (Yejaman). அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து சேதுபதி ஐபிஎஸ், ராஜகுமாரன், வீரா , தாய் மாமன் போன்ற படங்களில் நடித்தார். மேலும் கடந்த 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை என்ற படத்தின் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய ஹிட்டானது.

இந்த படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் நாட்டாமை படத்தில், ஒரு சில காட்சிகளில் நடிக்கும்போது அதை அருவருப்பாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். அதை பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

நடிகை மீனா சொன்ன விஷயம் :

முன்னதாக பேசிய நேர்காணலில் நடிகை மீனா “நான் நாட்டாமை படத்தில் நடிக்கும்போது, முதல் தடவை கர்ப்பம் மற்றும் குழந்தை பிறக்கும் காட்சியில் நடித்தேன். எனக்கு அனுபவமே கிடையாது. எனக்கு என்ன பண்ணவேண்டும் என்றே தெரியாமல் நின்றேன். அந்த காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் அருவருப்பாக இருந்தது. நிறையக் கூச்சமாக இருந்தது. மேலும் அந்த காட்சி எடுக்கப்பட்ட கிராமத்தில் எல்லாரும் என்னை விநோதமாகத்தான் பார்த்தார்கள், அவர்கள் பார்த்து எனக்குக் கூச்சமாகத் தெரிந்தது.

நான் படத்திற்காகத்தான் அவ்வாறு நடிக்கிறேன் என்று எனக்குத் தெரியும், எனது படக்குழுவினருக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு அது தெரியவில்லை. அதுவும் அந்த ஊர் கிராமம். ஆனால் அந்த மக்கள் என்னை வினோதமாகப் பார்த்து, மேலும் பரிதப் பட்டார்கள் என்று நடிகை மீனா கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டாமை திரைப்படம்

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் நாட்டாமை. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார், குஷ்பு, மீனா மற்றும் மனோரமா எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.  இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலான நிலையில், இன்றுவரையிலும் மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!