cinema Rewind : சந்திரமுகி படத்தில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்!

Actress Jyothika : தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் ஜோதிகா. இவரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் எந்த படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சந்திரமுகி படத்தில் அந்த நடிகை நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

cinema Rewind : சந்திரமுகி படத்தில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்!

நடிகை ஜோதிகா

Published: 

24 May 2025 22:28 PM

 IST

நடிகை ஜோதிகா (Jyothika)  இந்தி சினிமாவில் அறிமுகமாகி பின்தான், தமிழில் முன்னணி ஹீரோயினியாக நடித்தார். இவரைத் தமிழில் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah) . நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான வாலி (Vaalee) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் தமிழில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா (Suriya) , விஜய் (Vijay) , என பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்திருந்தார். இவரின் நடிப்பில் தமிழில் மிகப் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்ததுதான் சந்திரமுகி (Chandramukhi). கடந்த 2005ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர். பி வாசு இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை ஜோதிகா கங்கா மற்றும் சந்திரமுகி என 2 வேடங்களில் நடித்திருந்தார்.

இந்த படமானது வெளியாகி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு , நயன்தாரா எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், சந்திரமுகி படத்தில் எனக்குப் பதிலாக அவர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை சிம்ரன்தான்.

நடிகை ஜோதிகா பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் நடிகை ஜோதிகாவிடம் உங்களுக்குப் பதிலாக சந்திரமுகி படத்தில் தயார் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு நடிகை ஜோதிகா , “எனக்குப் பதிலாக நடிகை சிம்ரன் நடித்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். ஏனென்றால் என்னைவிட நடிகை சிம்ரன் சிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். அவர் இந்த படத்தில் நடித்திருந்தால், சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு அருமையாக இருந்திருப்பார் என நடிகை ஜோதிகா கூறியிருந்தார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்குத் தாவிய ஜோதிகா :

நடிகை ஜோதிகா இறுதியாக கடந்த 2021ம் ஆண்டு வெளியான உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து 4 வருடங்களாகத் தமிழ் சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவர் தொடர்ந்து மலையாள மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் காதல் தி கோர் என்ற படத்தில், அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு ஓரளவு வரவேற்ப்பை கொடுத்து. இவர் இறுதியாக இந்தியில் டப்பா கார்டெர் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கோலிவுட் சினிமாவில் நடிப்பதை முழுமையாகத் தவிர்த்ததாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?