நெகட்டிவ் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொண்டே வளர்கிறேன் – அனிகா சுரேந்திரன்
Actress Anikha Surendran: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் ரீல் மகள் என்று கொண்டாடப்படும் நடிகை அனிகா சுரேந்திரன் சினிமாவில் தான் எதிர்கொண்ட நெகிட்டிவான விமர்சனங்கள் குறித்தும் அதிலிருந்து தான் என்ன கற்றுக்கொண்டேன் என்பது குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனிகா சுரேந்திரன்
தமிழ் சினிமாவில் அஜித்தின் (Actor Ajith) மகள் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது அனிகா சுரேந்தரனின் (Actress Anikha Surendran) முகம் தான். தமிழகத்தில் பலர் நடிகர் அஜித்தின் உண்மையான மகள் இவர்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மலையாள சினிமாவில் 2010-ம் ஆண்டு நடிகர் ஜெயராம் நடிப்பில் வெளியான படம் கதை துடருன்னு. இந்தப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை அனிகா சுரேந்திரன். அதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஃபோர் ஃப்ரண்ட்ஸ், பவுட்டியுடே நாமத்தில், 5 சுந்தரிகள், நீலகாசம் பச்சைக்கடல் சுவாச பூமி, நயனா, ஒண்ணும் மிண்டாதே என பலப் படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த நிலையில் 2015-ம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடிகர்கள் த்ரிஷா மற்றும் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இந்தப் படத்தில் த்ரிஷாவின் மகளாக இருக்கும் நடிகை அனிகா த்ரிஷா இறந்ததும் அவரது காதலன் நடிகர் அஜித் அனிகாவை வளர்க்க ஆரம்பிக்கிறார். இதில் அஜித்தின் மகளாகவே ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்கு அறியப்பட்டவராக மாறினார். பலர் நடிகர் அஜித்தின் உண்மையான மகள் அனிகா என்றே பல நாள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
அதற்கு காரணம் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடிகை அனிகா அவரது மகளாக நடித்திருந்தது. இந்தப் படத்திலும் அப்பா மகள் பாசத்தில் ரசிகர்களை உருக வைத்தனர் இருவரும். இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா கடந்த 2023-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓ மை டார்லிங் படத்தின் மூலம் நாயகியா அறிமுகம் ஆனார்.
நாயகியாக நடித்த முதல் படத்திலேயே லிப் லாக் சீனில் நடித்து வைரலானார் நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் அனிகா இறுதியாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படதின் மூலம் தமிழில் நாயகியாக தோன்றினார்.
நடிகை அனிகா சுரேந்தரனின் இன்ஸ்டா பதிவு:
இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படத்தில் நடிகை அனிகாவின் நடிப்பைப் பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குறித்து அனிகா பேசியிருந்தார்.
அதில், தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ஸ்களில் தான் நிறைய கற்றுக் கொண்டதாகவும் அது தன்னை பாதிக்காத வகையிலேயே எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள் என்றும் அதனை தான் பெரிதாக பொருட்படுத்துவது இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.