நெற்றி குங்குமம்… தங்கம், வைர புடவையால் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்.. கேன்ஸ் விழாவை ஆபரேஷன் சிந்தூருடன் இணைத்த ரசிகர்கள்!
Actress Aishwarya Rai: ஆண்டு தோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் விழா இந்த ஆண்டும் கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பிரலங்கள் கலந்துகொள்வார்கள். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த விழாவிற்கு நெற்றியில் குங்குமத்துடன் வந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஐஸ்வர்யா ராய்
பல நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் அனைவரும் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்று வரும் கேன்ஸ் (Cannes Film Festival 2025) திரைப்பட விழாவில் கூடியுள்ளனர். இதில் நடிகர் நடிகைகள் எந்த லுக்கில் தோன்றுகின்றனர் என்பதைப் பார்க்கவே அனைத்து ரசிகர்களும் ஆவளுடன் காத்திருந்தனர். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai Bachchan_ என்ன உடை அணிந்து வருகிறார் என்பதை பார்க்கவே ஒரு ரசிகர்கள் கூட்டம் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு என்ன உடையில் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன்படி இந்த ஆண்டு தங்கம் மற்றும் வைரம் பதித்த புடையில் தோன்றினார் நடிகை ஐஸ்வர்யா ராய். மேலும் தனது நெற்றியில் செந்தூர் திலகம் இட்டு வந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஆப்ரேஷன் செந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பதில் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவில் உள்ள மக்கள் உட்பட பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் அதனை ஆதரிக்கும் விதமாகவே செந்தூர் வைத்து கேன்ஸ் விழாவில் பங்கேற்றார் என்று தெரிவித்து வருகின்றனர்.
உலக அழகி டூ நாயகி:
கடந்த 1997-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராயின் இன்ஸ்டா பதிவு:
இவர் தமிழில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அதிக்கடியான படங்கள் இந்தியிலேயே நடித்துள்ளார். அது மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் பெங்காலி மொழியிலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இந்தியில் இறுதியாக 2018-ம் ஆண்டு இவரது நடிப்பில் ஃபன்னே கான் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா ராயின் உடை:
2025-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த உடையை பிரபல் உடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவைத்துள்ளார். இந்த புடவையில் மொசாம்பிக் மாணிக்கங்கள், தங்கங்கள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உடை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.